ரஜினியின் மாப்பிள்ளை படத்தை ரீமேக்கும் தனுஷ்!!

இந்தப் படத்தை இயக்குபவர் சுராஜ். ரஜினியின் படிக்காதவன் படத் தலைப்பைப் பயன்படுத்தி, தனுஷுக்கு வெற்றிப் படம் கொடுத்தவர் இவர்.
ஹிதேஷ் ஜபக் தயாரிக்கும் இந்த 'மாப்பிள்ளை', ரஜினி நடித்த படத்தின் ஜெராக்ஸ் காப்பியாக வரவிருக்கிறதாம்.
இதுகுறித்து 'மாப்பிள்ளை'யின் நிஜ மாப்பிள்ளையான தனுஷ் கூறுகையில், "நான் ரீமேக் செய்து நடிக்க விரும்பும் ரஜினி படம் மாப்பிள்ளைதான். அந்தப் படம் ஒரு கோல்ட் மாதிரி. நிச்சயம் என்னால் கெட்டுவிடாது. அந்த அருமையான சூப்பர் ஹிட் படத்தை இன்றைய பல இளைஞர்களும் பார்த்து ரசிக்க வேண்டும் என்பதால்தான் ரீமேக் செய்கிறோம். அதே கதை, காட்சிகள்... ஆனால் இன்னும் டெக்னிக்கலாகச் சொல்லப் போகிறோம். ரஜினி சாரின் பூரண ஆசீர்வாதத்துடன் இந்தப் படத்தைத் துவங்குகிறோம்," என்றார்.
ஸ்ரீவித்யா, அமலா பாத்திரங்களுக்கு பொருத்தமான கலைஞர்களைத் தேடும் பணி நடந்து வருகிறகது. விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வரும்.
ஒரிஜினல் மாப்பிள்ளையைத் தயாரித்தவர் தெலுங்கு சூப்பர்ஸ்டார் சிரஞ்சீவி. படத்தில் ஒரு காட்சியில் ரஜினியின் தம்பியாக தோன்றி ஒரு அட்டகாசமான சண்டையும் செய்திருப்பார் சிரஞ்சீவி.


Click it and Unblock the Notifications











