கமல், படம் துவங்கும் முன்பே...!

By Staff

Naseeruddin Shah and Anupam Kher in A Wednesday
கமல் விஷயத்தில் இந்த முறை படம் ஆரம்பிக்கும் முன்பே வழக்கு, கோர்ட் என ஆரம்பித்துவிட்டார்கள்!.

'எ வெட்னஸ்டே' இந்திப் படத்தை தமிழில் 'தலைவன் இருக்கின்றான்' என் பெயரில் படமாக எடுக்க விரும்பினார் கமல். ஆனால் இப்போது இந்த ரீமேக் உரிமையை கமல்ஹாசனுக்கு தரக்கூடாது என ஹைதராபாத் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்திருக்கிறார் தயாரிப்பாளர் கிரண் கொனேரு.

நஸிருத்தீன் ஷா, அனுபம் கேர் நடிப்பில் இந்தியில் வெளியான படம் 'எ வெட்னஸ்டே'. யு டிவி தயாரித்திருந்த இந்தப் படம் பெரிய அளவு பாராட்டைப் பெற்றது.

தீவிரவாதத்தால் நாடு படும்பாட்டை கண்டு பொறுக்க முடியாத ஒரு சாதாரண குடிமகன் வெறும் வெடிகுண்டு மிரட்டல் மூலம் சிறையில் உள்ள தீவிரவாதிகளை வெளியே வரவைத்துக் காலி செய்யும் கதை.

ஒரு பாழடைந்த கட்டட மாடி, ஒரு போன், போலீ்ஸ் கட்டுப்பாட்டு அறை, ஒரு டிவி குழு என மாறி மாறி காட்சிகள் ஓடும் படம் இது. நஸிருதீன் ஷாவின் நடிப்பும், அவரது பேச்சும் தான் கதையின் பலம். மிக நேர்த்தியான டைரக்ஷன் மூலம் பார்ப்பவர்களை மிரளச் செய்திருந்தார் டைரக்டர்.

டிவி நிருபராக தீபல் ஷாவும் பின்னி எடுத்திருந்தார்.

இப்படத்தை தமிழ், தெலுங்கு மொழிகளில் ரீமேக் உரிமையை பெற கடும் போட்டி நிலவியது.

தெலுங்கு பட தயாரிப்பாளர் கிரண் கொனேரு, தமிழ் மற்றும் தெலுங்கில் இப்படத்தின் ரீமேக் உரிமைக்காக யு டிவி நிறுவனத்துடன் பேசினார். இதற்காக யு டிவிக்கு அவர் ஒரு தொகையை அட்வான்ஸாக வழங்கியதாகவும் கூறப்படுகிறது.

இதற்கிடையே இப்படத்தின் தமிழ், தெலுங்கு ரீமேக் உரிமையை யு டிவியிடம் கமல்ஹாசன் கேட்டார். இதையடுத்து கமலுக்கு இப்பட உரிமையை வழங்குவதாக யு டிவி, கிரணிடம் தெரிவித்துள்ளது. இதனால் ஹைதராபாத் சிட்டி சிவில் நீதிமன்றத்தில் யு டிவிக்கு எதிராக மனு தாக்கல் செய்திருக்கிறார் கிரண்.

ஆனால் யு டிவி நிறுவனத்தை சேர்ந்த கல்பனா மிஸ்ரா, இந்த வழக்கு தொடர்பாக எங்களுக்கு ஒன்றும் தெரியாது. தென்னிந்திய மொழிகளில் 'எ வெட்னஸ்டே' படத்தை ரீமேக் செய்ய பலரிடம் பேசி வருகிறோம். இதுவரை யாருக்கும் இதன் ரீமேக் உரிமையை விற்கவில்லை, என்று கூறியுள்ளார்.

தெலுங்கில் இப்படத்தை இயக்க ஜே.டி. சக்ரவர்த்தியை ஒப்பந்தம் செய்திருந்தார் கிரண். சக்ரவர்த்தி கூறும்போது, 'கோர்ட்டில் வழக்கு இருப்பது செய்திருப்பது உண்மைதான். நீதிமன்ற உத்தரவு வரும்வரை இது பற்றி பேச முடியாது' என்றார்.

சிக்கல் எல்லாம் தீர்ந்து நஸிருதீன் ஷா வேடத்தை கமல் செய்தால்.. நினைத்தாலே இனிக்கிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X