கமல் எனக்கு கடவுள் மாதிரி! - உருகும் மாதவன்
கமல் எனக்கு கடவுள் போன்றவர். அவர் மன்மதன் அம்பு படப் பாடலைப் பாடி நடனமாடியபோது என்னையும் அறியாமல் அழுதுவிட்டேன், என்றார் மாதவன்.
ஏற்கனவே அன்பே சிவம் என்ற படத்திலும் சேர்ந்து நடித்தார்கள் கமல்ஹாஸனும் மாதவனும். கமலின் சொந்தப் படமான நளதமயந்தியிலும் மாதவன்தான் நாயகனாக நடித்தார். இதில் கமல் கவுரவ வேடத்தில் வந்தார்.
இப்போது மன்மதன்அம்பு படத்தில் இணைந்து நடித்துள்ளனர்.
இப்படத்தின் பாடல் வெளியீடு விழாவை சிங்கப்பூரில் நடத்தினார்கள். இவ்விழாவில் கமல் தன்னை அழ வைத்ததாக மாதவன் கூறினார்.
இதுகுறித்து அவர் நிருபர்களிடம் கூறுகையில், "கமல் எனக்கு கடவுள் போன்றவர். அவருடன் நடித்த அனுபவங்கள் மறக்க முடியாதவை.
மன்மதன் அம்பு படத்தில் நீலவானம் என்று துவங்கும் பாடலை கமல் எழுதி இருக்கிறார். அற்புதமான பாடல் அது.
சிங்கப்பூர் விழாவில் அந்த பாட்டை கமல் மேடையில் பாடினார். அதை கேட்டபோது நான் குழந்தைபோல் அழுதேன். ஆண்கள் அழக் கூடாது என்பார்கள். ஆனால் கமல் பாடல் என்னை அழ வைத்தது. விழாவில் பங்கேற்ற பலர் கண்களில் கண்ணீரை பார்த்தேன்..", என்றார்.


Click it and Unblock the Notifications











