மறுபடியும் நடிக்கும் கார்த்திக்!

By Staff

Rithima with Karthick
அரசியல் பணிகள் சற்று ஓய்ந்திருப்பதால் மறுபடியும் நடிக்க வந்து விட்டார் கார்த்திக். அதற்கேற்றார்போல நான்கு ஆண்டுகளுக்கு முன்பு நிறுத்தப்பட்ட கார்த்திக் படத்தின் ஷூட்டிங் மீண்டும் தொடங்கியுள்ளது.

லோக்சபா தேர்தலில் போட்டியிட்டு 17 ஆயிரத்து சொச்சம் ஓட்டுக்களை வாங்கித் தோல்வி அடைந்த கார்த்திக் இப்போது மீண்டும் நடிக்க வந்து விட்டார்.

நான்கு ஆண்டுகளுக்கு முன்பு கார்த்திக் நடிக்க ஒப்புக் கொண்ட படம் காஷ்மீர். சில வார படப்பிடிப்புக்குப் பின்னர் படத்தின் தயாரிப்பாளருக்கும், பைனான்சியருக்கும் இடையே பஞ்சாயத்து ஏற்பட்டதால் படப்பிடிப்பு பாதியில் நின்று போனது.

இந்தப் படத்தை இப்போது பிரச்சினை தீர்ந்து தூசு தட்டி எடுத்திருக்கிறார்கள். படத்தின் பெயரையும் உதயநேரம் என மாற்றி விட்டனர்.

படத்தில் மொத்தம் 3 நாயகிகள் ரிதிமா, ராதிகா செளத்ரி, விந்தியா. மூன்று பேருமே இந்த நான்கு ஆண்டுகளுக்குள் அட்ரஸ் இல்லாமல் போய் விட்டனர். ராதிகா செளத்ரி எங்கிருக்கிறார் என்று தெரியவில்லை. விந்தியா கல்யாணமாகி, இப்போது விவாகரத்துக்கும் ரெடியாகி விட்டார். ரிதிமா என்ன ஆனார் என்று தெரியவில்லை.

இருந்தாலும் படப்பிடிப்பைத் தொடங்கி விட்டனர். இந்தப் படத்தில் பிரபலமான பாடகர் வேடத்தில் நடிக்கிறாராம் கார்த்திக்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X