கோ படம் ரிலீஸ்... அலகு குத்தி பால்குடம் எடுத்த ஜீவா ரசிகர்கள்!!
ஜீவா நடித்த கோ படம் வெற்றியடைய, அவரது ரசிகர்கள் இன்று காலை பால்குடம் தூக்கி, அபிஷேகம் செய்து பரபரப்பேற்படுத்தினர்.
நெரிசல் மிகுந்த வடபழனியில் உள்ள ஏவி எம் ராஜேஸ்வரி திரையரங்கி இந்தப் படம் இன்று வெளியாகியுள்ளது.
முதல் காட்சி துவங்குவதற்கு முன், ஜீவாவின் ரசிகர்கள் ஏராளமானோர் மேள தாளம் முழங்க, பால்குடம் எடுத்து ஊர்வலமாக வந்து, படம் வெற்றியடைய வேண்டிக் கொண்டனர். ரசிகர் மன்றத்தைச் சேர்ந்த இன்னும் சிலர் அலகு குத்தி வந்தனர்!
ரசிகர்களின் இந்த செயலை ஏராளமான பொதுமக்கள் வேடிக்கைப் பார்த்த வண்ணமிருந்தனர். ஜீவாவின் மேலாளர் பிடி செல்வகுமார், ரசிகர் மன்றத் தலைவர் யுவராஜ் ஆகியோர் இதற்கான ஏற்பாடுகளைச் செய்திருந்தனர்.
பால்குடத்துடன் திரையரங்குக்குள் நுழைந்த ரசிகர்கள் திரையரங்க வளாகத்தில் வைக்கப்பட்டிருந்த ஜீவாவின் கட் அவுட்டுக்கு பாலாபிஷேகம் செய்து, பூக்கள் தூவினர். ஜீவாவை வாழ்த்தி கோஷங்களை எழுப்பினர்!
அய்ய'கோ'!!


Click it and Unblock the Notifications











