ஆந்திர வெள்ள நிவாரண நிதி: கலை விழாவில் ரஜினி

Rajini
ஆந்திர வெள்ள நிவாரண நிதி திரட்டும் நட்சத்திர்க கலைவிழாவில் சூப்பர் ஸ்டார் ரஜினி உள்ளிட்ட தமிழ் நடிகர்கள் பங்கேற்கிறார்கள்.

ஆந்திராவில் சமீபத்தில் பெய்த மழையில் பலத்த சேதம் ஏற்பட்டது. ஆயிரக்கணக்கான மக்கள் வீடுகளை இழந்துள்ளனர். மத்திய அரசு சார்பில் ரூ.1000 கேடி நிதியுதவி வழங்கப்பட்டுள்ளது. ஆனால் மாநிலத்தில் ஏற்பட்டுள்ள இழப்பு மிக அதிகம் என்பதால் தன்னார்வத்துடன் பல அமைப்புகள் நிதி திரட்டுவதில் இறங்கியுள்ளன.

ஆந்திர திரையுலகமும் நிதி திரட்ட முன் வந்துள்ளது. இதற்காக பிரமாண்ட நட்சத்திர கலை விழாவை ஹைதராபாத்தில் நடத்துகின்றனர் திரையுலகினர்.

தமிழ், இந்தி மற்றும் மலையாள திரையுலகைச் சேர்ந்த முன்னணி நடிகர் நடிகைகளையும் விழாவுக்கு அழைத்திருந்தனர்.

இந்த விழா ஏற்பாடுகள் குறித்து நடிகர் பாலகிருஷ்ணா ஹைதராபாத்தில் நிருபர்களிடம் கூறியதாவது:

ஆந்திர வெள்ள நிவாரணத்துக்கு நிதி திரட்ட வருகிற 2-ந்தேதி நட்சத்திர கலைவிழா நடத்த திட்டமிட்டுள்ளோம். ஐதராபாத்தில் உள்ள கச்சிபவுலி மைதானத்தில் இந்த விழா நடக்கிறது. இதில் தெலுங்கு நடிகர், நடிகைகள் அனைவரும் பங்கேற்கின்றனர்.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இந்த விழாவில் கலந்து கொள்வதாக உறுதியளித்துள்ளார்.

அவருடன் விஜயகாந்த், விக்ரம் மற்றும் அர்ஜூன் ஆகியோரும் பங்கேற்கிறார்கள்.

மும்பையில் இருந்து ராஜேஷ் கண்ணா, ஜெயப்பிரதா, ஸ்ரீதேவி ஆகியோரும் வருகிறார்கள். பெரிய அளவில் இந்த நட்சத்திர கலைவிழா நடைபெறும்.

ஆந்திர மக்களுக்காக வெள்ள நிவாரண நிதி திரட்ட இவ்விழா நடக்கிறது. எனவே ரசிகர்கள் டிக்கெட் எடுத்து பெருந்திரளாக இவ்விழாவில் பங்கேற்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன், என்றார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X