பாலாவுக்காக 'வில்லனான' ஆர்கே!

By Chakra

RK and Meghna Naidu
வில்லனாக ஆரம்பித்து ஹீரோவாக நடித்து வந்த ஆர்கேவை மீண்டும் வில்லனாக்கியிருக்கிறார் இயக்குநர் பாலா.

எல்லாம் அவன் செயல் வெற்றிக்குப் பிறகு தானே தயாரித்து ஹீரோவாகவும் நடித்து வருகிறார் ஆர்கே. இப்போது பி வாசு இயக்கத்தில் புலிவேஷம் படத்தில் ஹீரோவாக நடிக்கும் அவர், அடுத்து ஷாஜி கைலாஷ் இயக்கத்தில் பிரமாண்டமான படம் ஒன்றில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.

இருந்தாலும் பாலாவின் படம் என்பதால், அவன் இவன் பட வாய்ப்பை உடனடியாக ஒப்புக் கொண்டாராம்.

ஆர் கே மீது பாலாவுக்கு ஏன் இந்த அக்கறை என்கிறீர்களா?

எல்லாம் ஒரு கொடுக்கல் வாங்கலில் ஏற்பட்ட பரஸ்பர புரிந்து கொள்ளல்தான் என்கிறார்கள்.

நான் கடவுள் ரிலீஸ் சமயத்தில் ஒரு குறிப்பிட்ட தொகையை கொடுத்தால்தான் படம் வரும் என்ற சூழலில், பாலாவுக்கு உதவிக்கரம் நீட்டி அந்த தொகை முழுவதையும் வட்டியில்லாமல் கொடுத்தவர் ஆர்கே.

குறிப்பிட்ட தேதிக்குள் பாலாவால் அந்தப் பணத்தை திரும்ப ஆர்கேவுக்கு தர முடியவில்லை. ஆனாலும் ஆர்கே பெருந்தன்மையோடு காத்திருக்க, அடுத்த சில மாதங்களில் முழுவதுமாக கடனை அடைத்து விட்டாராம் பாலா.

ஆர்கேயின் இந்த பெருந்தன்மைக்குப் பரிசாக, தனது படத்தின் பிரதான வில்லன் பாத்திரத்துக்கு ஆர்கேவையே ஒப்பந்தம் செய்து விட்டாராம் பாலா.

ஹீரோவாக இருந்தவர், வில்லனாக மீண்டும் இறங்கியது சரிதானா? என்றால், 'பாலா படத்தில் வில்லன் வாய்ப்பு கிடைப்பதே பெரிய விஷயம்தானே' என்கிறார் ஆர்கே.?

பாலா படத்தில் சின்ன 'பீஸ்' கிடைத்தாலும் 'கிளாஸ்' ஆக இருக்கும். ஆர்.கேவுக்கு 'லெக் பீஸே' கிடைத்துள்ளதே, விட முடியுமா என்ன...?

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X