நடிகர் சங்க தேர்தல்-சரத் போட்டியிட மறுப்பு?

தென்னிந்திய நடிகர் சங்கத்துக்கு மூன்று வருடங்களுக்கு ஒருமுறை தேர்தல் நடக்கிறது. கடந்த 2 முறையும் தென்னிந்திய நடிகர் சங்க தலைவராக சரத்குமாரே தேர்வு செய்யப்பட்டார்.
இப்போது சரத்குமாருக்கும், மற்ற நிர்வாகிகளுக்கும் பதவி காலம் முடிகிறது. புதிய நிர்வாகிகளுக்கு, விரைவில் தேர்தல் நடைபெற உள்ளது.
மூன்றாவது முறையாகவும் தலைவர் பதவிக்கு சரத்குமாரையே நிறுத்த அவரது ஆதரவாளர்கள் வற்புறுத்தி வருகின்றனர். அவர் மைத்துனரும், சங்கத்தின் செயலாளருமான ராதாரவியும் வலியுறுத்தியுள்ளார்.
ஆனால் தனது கட்சி அசமகவை வரும் சட்டமன்ற தேர்தலுக்குள் முழுமையாகத் தயார் செய்ய விரும்புவதால், மீண்டும் போட்டியிட விருப்பமில்லை என சரத்குமார் கூறிவருகிறாராம்.
எனினும் வரும் ஞாயிற்றுக்கிழமை நடக்கும் தென்னிந்திய நடிகர் சங்க பொதுக்குழு கூட்டத்தில் அவர் சாதகமான பதிலைத் தெரிவிப்பார் என நடிகர் சங்க நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.


Click it and Unblock the Notifications











