நமீதாவின் கெஸ்ட் சிம்பு

By Staff

Namitha with Simbu
நமீதா நாயகியாக நடிக்கும் ஜெகதலப்பிரதாபன் படத்தில், கெஸ்ட் ரோலில் தலையைக் காட்டுகிறாராம் சிம்பு.

ஜெகஜாலங்களையும் காட்டி ஜெகன்மோகினியில் கலக்கிக் கொண்டிருக்கிறார் நமீதா. இப்படத்தை தனது படங்களிலேயே முத்திரைப் படம் என்றும் பெருமையாக கூறி வருகிறார்.

காரணம், இதுவரை நான் நடித்ததை விட இந்தப் படத்திற்குத்தான் அதிக பிரயத்தனம் செய்ய நேரிட்டது. எனவே இந்தப் படம் எனக்கு ரொம்ப ரொம்ப முக்கியமானு என்பது நமீதாவின் கருத்து.

இந்தப் படத்தை முடித்து விட்டு ஜெகதலப்பிரதாபன் என்ற புதிய படத்தில் நடிக்கவுள்ளார் நமீதா. இதை பல புகழ் பெற்ற படங்களின் எடிட்டரான ஆண்டனிதான் இயக்குகிறார். இதன் மூலம் அவரும் இயக்குநராகிறார்.

படத்திற்கு ஜெயராம்தான் நாயகன். யூகி சேதுவுக்கு முக்கிய ரோலைக் கொடுத்துள்ளார். நாயகியாக நமீதாவை புக் செய்துள்ள ஆண்டனி, தனது தோஸ்த் சிம்புவையும் படத்தில் இழுத்துப் போட்டுள்ளார்.

சிம்புவின் ஏகப்பட்ட கோலிவுட் நண்பர்களில் ஆண்டனியும் ஒருவர். எனவே ஆண்டனி கேட்டுக் கொண்டதுமே கெஸ்ட் ரோல் செய்ய ஒப்புக் கொண்டு விட்டாராம் சிம்பு.

நமீதாவுடன் சிம்புவுக்கு டான்ஸ் ஏதும் இருக்குமா என்று தெரியவில்லை.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X