நாய் சர்ச்சை: ஷாருக்கிடம் அமீர் ஸாரி!

By Staff

Aamir Khan
தனது வீட்டு நாய்க்கு ஷாருக் கானின் பெயர் வைத்ததற்காக அவரிடம் மன்னிப்பு கேட்டுள்ளார் நடிகர் அமீர் கான்.

நடிகர் அமீர்கான் சமீபத்தில் தனது பிளாக்கில், தனது வீட்டு நாய்க்கு ஷாருக் என பெயர் வைத்துள்ளதாக கூறியிருந்தார். இது ஷாருக் ரசிகர்களை கொந்தளிப்பில் ஆழ்த்தியது. ஆனால் இதை பெருந்தன்மையாக ஏற்ற ஷாருக், பரவாயில்லை என்று கூலாக கூறி விட்டுப் போய் விட்டார்.

இருப்பினும் ஷாருக் கானின் ரசிகர்கள் அமீருக்கு எதிராக போர்க்கொடி உயர்த்தினர். போராட்டங்களும் வெடித்தன.

இந்த நிலையில், தனது வீட்டு நாய்க்கு ஷாருக் என பெயர் வைத்ததற்காக மன்னிப்பு கேட்டுள்ளார் அமீர்கான். இதுகுறித்து அமீர்கான் கூறுகையில், எனது பிளாக்கில் இடம் பெற்ற அந்த விஷயம் குறித்து சிலர் மன வருத்தமும், அப்செட்டும் ஆகியிருப்பதாக உணர்கிறேன். அப்படி இருந்தால் அதற்காக நான் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன்.

ஆனால் நான் யாரையும் புண்படுத்த வேண்டும், அப்செட் ஆக்க வேண்டும் என்பதற்காக அப்படி எழுதவில்லை. அது எனது நோக்கமும் அல்ல என்றார் அமீர்கான்.

மேலும் அவர் கூறுகையில், நகைச்சுவைக்காகத்தான் நான் அப்படிக் கூறியிருந்ேதன். அதுதான் எனது எண்ணமும் கூட. ஆனால் ஷாருக்கின் ரசிகர்களும், மற்றவர்களும் இதற்காக மனம் புண்பட்டிருந்தால் தயவு செய்து என்னை மன்னித்து விடுங்கள். வேண்டும் என்றே நான் இதைச் செய்யவில்லை.

ஷாருக் எனது உண்மையான நண்பர். அவர் மீது நான் மிகுந்த மரியாதை வைத்துள்ளேன்.

எனது பிளாக்கில் நான் எனது நாய்ப் பெயர் குறித்து எழுதியதை பலரும் வேடிக்கையாக எடுத்துக் கொண்டனர். ஆனால் சிலர் அதை தவறாக எடுத்துக் கொண்டு விட்டனர். எனது ரசிகர்களும் கூட இதைத் தவிர்த்திருக்கலாம் என்று கூறியுள்ளனர் என்றார் அமீர்கான்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X