Just In
- 21 min ago
ஒரு வழியாக ஷூட்டிங் ஓவர்.. மொத்த பட யூனிட்டுக்கும் காஸ்ட்லி கிஃப்ட் கொடுத்த பிரபல ஹீரோ!
- 38 min ago
பிக்பாஸ் டைட்டில் வின்னர் ஆரியின் முதல் டிவிட்.. என்ன சொல்லியிருக்கார் பாருங்க!
- 50 min ago
கப்பும் காசும் கீழ இருக்கு.. ஆரி கையில் அவரது செல்ல மகள்.. கமலுக்கு அன்பு முத்தம்.. பாச பிக்பாஸ்!
- 1 hr ago
மாநகரம், கோலமாவு கோகிலா, கைதி, மாஸ்டர்.. தமிழ்ப் படங்களின் இந்தி ரீமேக்கிற்கு கடும் போட்டி!
Don't Miss!
- Finance
முதல் நாளே ஏமாற்றம் தந்த சென்செக்ஸ்.. நிஃப்டியும் சரிவு.. என்ன காரணம்..!
- Sports
புது ஆள் வந்தவுடன் வெற்றி.. நார்த் ஈஸ்ட் குதூகலம்.. ஜாம்ஷெட்பூர் பரிதாபம்!
- News
முதலில் விஷ தாக்குதல்... இப்போது கைது... இறுகும் பிடி.. சிக்கலில் நவல்னி
- Lifestyle
கா்ப்பப்பை வாய் புற்றுநோய் பற்றி ஒவ்வொரு பெண்ணும் தெரிந்து கொள்ள வேண்டிய விஷயங்கள்!
- Automobiles
20-இன்ச் அலாய் சக்கரங்களுடன் கியா சொனெட் காரை பார்த்திருக்கீங்களா?! இங்க பாத்துக்கோங்க
- Education
ரூ.62 ஆயிரம் ஊதியத்தில் தமிழக அரசு நிறுவனத்தில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்!
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
சிம்பு இனி 'எஸ்டிஆர்'!

இந்தப் பெயர் சுருக்கம் வந்ததற்கு ஒரு தனிக் கதையே இருக்கிறது. சிம்பு தற்போது நடித்து வரும் வானம் படத்தின் லண்டன் ஷூட்டிங்குக்காக விசாவுக்கு விண்ணப்பித்திருந்தார் சிம்பு. அப்போது விசா விண்ணப்பத்தில் அவரது முதல் பெயர், நடுப் பெயர் உள்ளட்டவற்றை எழுதுமாறு கூறியிருந்தனர்.
இதையடுத்து இனிஷயலின் விரிவாக்கத்துடன் சிலம்பரசன் தேசிங்கு ராஜேந்திரன் என்று எழுதியிருந்தார் சிம்பு. இதைப் பார்த்த விண்ணப்ப அதிகாரி (அவருக்கு தமிழ் தெரியுமாம்) உங்களது பெயரைப் பார்த்தால் எம்.ஜி.ஆர்., என்.டி.ஆர். போலவே தெரிகிறதே. பேசாமல் எஸ்டிஆர் என உங்களது பெயரை மாற்றிக்கொள்ளலாமே எனக் கூறினாராம்.
எம்ஜிஆரும், என்டிஆரும் எத்தனையோ சாதனைகளைச் செய்தவர்கள். அவர்களுடன் தன்னை ஒப்பிட்டு அந்த அதிகாரி பேசியதால் மகிழ்ச்சி அடைந்த சிம்பு, இந்தப் பெயரிலேயே இனி எல்லோரும் அழைக்கட்டும் என விருப்பம் தெரிவித்துள்ளாராம்.
இதை விட முக்கியமான ஒரு மேட்டர் உள்ளது. விண்ணைத் தாண்டி வருவாயா படத்திற்குப் பிறகு சிம்புவின் இமேஜ் பல மடங்கு உயர்ந்துள்ளதாம். குறிப்பாக சமூக சேவை நிறுவனங்கள் பலவும் சிம்புவை அணுகி வருகின்றனவாம்.
தங்களுக்காக ஏதாவது செய்யுங்களேன் என்றும் அவர்கள் கோரி வருகிறார்களாம். இதை ஏற்று அவர்களுடன் கை கோர்க்க சிம்புவும் முடிவு செய்துள்ளாராம். விரைவில் இதை அதிகாரப்பூர்வமாக அறிவிப்பாராம்.
எம்.ஜி.ஆர், என்.டி.ஆர்., எஸ்.டி.ஆர், சமூக சேவை - ஏதோ லிங்க் இருப்பது போல தெரிகிறதே!!