ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் பாடுகிறாராம் த்ரிஷா!

குருவிக்குப் பின்னர் நிலைமை அப்படியே மாறிப்போனது. இப்போதைக்கு அபியும் நானும், சென்னையில் ஒரு மழைக்காலம் ஆகிய இரு படங்கள்தான் தமிழில்.
தெலுங்கில் இரண்டே படங்கள். ஒன்றில் தொலைக்காட்சிப் பாடகியாக வருகிறாராம். இந்த வேடத்தில் அச்சு அசலாகத் தோன்ற வேண்டுமே என்பதற்காக, சரியான உடல் மொழியைக் (தப்பா எடுத்துக்காதீங்க... அதான் பாடி லாங்குவேஜ்!) கற்றுக் கொண்டாராம் த்ரிஷா.
உண்மையில் த்ரிஷாவுக்கு பாடுவதில்தான் அலாதி ஆர்வமாம்.
'நடிப்பை விட பாடுவதில்தான் ஆரம்பத்தில் எனக்கு அதிக ஆர்வமிருந்தது. ஆனால் வாய்ப்பு அமையவில்லை. தெலுங்கில் 'கிங்' என்ற படத்தில் தொலைக் காட்சிப் பாடகியாக நடித்து வருகிறேன். இதில் அந்த வேடத்தில் சிறப்பாகத் தோன்ற முன் பயிற்சி எடுத்துக் கொண்டேன்..' என்கிறர் த்ரிஷா.
விரைவிலேயே ஏ.ஆர். ரஹ்மான இசையில் பாடப்போவதாகவும் கூறியுள்ளார்.
'ரஹ்மான் இசைக்கு தீவிர விசிறி நான். ஒருமுறையாவது அவரது இசையில் பாடிவிடத் துடித்துக் கொண்டிருந்தேன், இப்போது அப்படியொரு வாய்ப்புக் கிடைத்துள்ளது. விரைவில் இதுபற்றி அறிவிப்பேன், என்கிறார் த்ரிஷா.
சொந்தக்குரலில் பாடுவது இருக்கட்டும், சொந்தமா எப்போ டப்பிங் பேசப் போறீங்க?


Click it and Unblock the Notifications











