விஜய்.. இன்று கொடி, அடுத்த அதிரடி...!

By Staff

Vijay
நடிகர் விஜய்க்கு இன்று (ஜூன் 22) 35-வது பிறந்த நாள். இந்தப் பிறந்த நாளை மறக்க முடியாத நாளாகக் கொண்டாட வேண்டும் என்ற தன் ரசிகர்களின் நீண்ட நாள் விருப்பத்தை நிறைவேற்றும் பொருட்டு, தன் ரசிகர் மன்றத்துக்காக தனிக் கொடி ஒன்றை தன் பிறந்த நாள் விழாவின் போது அறிமுகம் செய்கிறார் விஜய்.

சென்னை பல்கலைக் கழக நூற்றாண்டு விழா மண்டபத்தில் இன்று மாலை 4.30 மணிக்கு நடைபெறவிருக்கும் இந்த விழாவில் ரசிகர் மன்றப் பிரமுகர்கள் மற்றும் நிர்வாகிகள் அனைவரும் பங்கேற்கின்றனர். முன்னதாக தனது பிறந்தநாளையொட்டி ஏழை எளியோருக்கு நல உதவிகள், அனாதை இல்லங்களுக்கு உதவிகள் வழங்குகிறார்.

சூப்பர் ஸ்டார் ரஜினி, விஜய்காந்த், சரத்குமாருக்கு அடுத்து ரசிகர்களுக்காக தனிக் கொடியை அறிமுகப்படுத்தும் நான்காவது நடிகர் விஜய். இவர்களில் விஜய்காந்தும், சரத்குமாரும் ரசிகர் மன்றக் கொடியையே தங்கள் கட்சிக் கொடியாகவும் மாற்றி விட்டனர்.

சூப்ப ர்ஸ்டாரின் ரசிகர்களோ தங்கள் தலைவர் அரசியலுக்கு வரும் முன்பே அவரது கொடியை அரசியலில் பயன்படுத்தத் தொடங்கிவிட்டனர்.

அடுத்து விஜய்யின் முறை.

நீல வண்ணக் கொடியின் நடுவில் விஜய்யின் உருவம் பொறிக்கப்பட்டிருப்பது போல இந்தக் கொடி இருக்கும் என்கிறார் அகில இந்திய விஜய் ரசிகர் மன்ற நிர்வாகி ஒருவர்.

ஏற்கெனவே மாவட்டம் தோறும் கல்யாண மண்டபங்கள் கட்டி ஏழைகளுக்கு இலவச திருமணம் நடத்த உத்தரவிட்டுள்ளார் விஜய். இந்தக் கல்யாண மண்டபங்களே ரசிகர் மன்ற அலுவலக்களாகவும் செயல்படும் என்றும் அறிவித்துள்ளார். அதாவது மாவட்ட தலைமை அலுவலகங்கள்...

ஓகே ஓகே... புதுக் கட்சி எப்பங்கனா...

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X