விஜய்யின் 'வில்லு' விசிட்!

முதல்கட்டமாக நேற்று அவர் கோவை சென்றார். ரசிகர்கள், அவருக்கு உற்சாக வரவேற்பு கொடுத்தார்கள்.
கோவை கங்கா, கே.ஜி.காம்ப்ளக்ஸ் தியேட்டர்களுக்கு நேரில் சென்று ரசிகர்களை சந்தித்தார். அவர்கள் மத்தியில் விஜய் பேசியதாவது:
நான் இதுவரை நடித்த படங்களில், முதல் 10 நாட்களில் அதிக வசூல் செய்த படம், வில்லு'தான். கோவை, மதுரை, சேலம் ஆகிய நகரங்களில் இதுவரை என் முந்தைய படங்கள் செய்திராத வசூல் சாதனையை வில்லு செய்து இருக்கிறது.
அதனால் அந்த தியேட்டர்களுக்கு நேரில் சென்று ரசிகர்களை சந்திக்க தோன்றியது. இன்று கோவை வந்திருக்கிறேன். இதையடுத்து பொள்ளாச்சி, திருப்பூர் ஆகிய ஊர்களுக்கும் செல்வேன்.
இந்த வெற்றியை, ரசிகர்களுடன் பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சி அடைகிறேன். என் முதல் படத்திலிருந்து இதுவரை எனக்கு ஆதரவு அளித்து வருகிறீர்கள். இந்த ஆதரவு எனக்கு எப்போதும் வேண்டும். உங்கள் மீது நான் வைத்திருக்கும் அன்பும் எப்போதும் மாறாது என்றார்.
பின்னர் நிருபர்களிடம் அவர் அளித்த பேட்டி:
கேள்வி: வில்லு படம் தோல்வி அடைந்துவிட்டதாக கூறப்படுகிறதே?
விஜய்: எல்லா படங்களுக்கும் இதுபோன்ற வதந்திகள் வரத்தான் செய்யும். அதை நாம் கண்டுக்கவே கூடாது. அதையும் தாண்டி ஜெயிக்கணும் என்பதுதான் நோக்கமாக இருக்க வேண்டும்.
கேள்வி: அடுத்த படம் எப்போது?
பதில்: என் அடுத்த படம், வேட்டைக்காரன். ஏவிஎம் தயாரிக்கும் இந்தப்படத்தின் ஷூட்டிங் மார்ச் மாதம் தொடங்கும்.


Click it and Unblock the Notifications











