'மாத்தாட' போகும் விக்ரம்!

ஹரிபிரசாத்தின் இயக்கத்தில் உருவாகும் இப்படத்தில் சிறப்பு வேடத்தில் விக்ரம் தோன்றுகிறார். ஹரிபிரசாத், விக்ரமை சந்தித்து அவரது கேரக்டர் குறித்துக் கூறியதும் நடிக்க ஒப்புக் கொண்டாராம் விக்ரம். ஆனால் விக்ரமை கன்வின்ஸ் செய்வதற்குள் அரும்பாடுபட்டு விட்டாராம் ஹரி பிரசாத்.
பெரும் பொருட் செலவில் உருவாகும் இப்படத்தில் விக்ரம் சம்பந்தப்பட்ட காட்சிகளை சென்னை அல்லது பெங்களூரில் வைத்து ஷூட் செய்யத் திட்டமிட்டுள்ளாராம்.
இப்படத்தில் திகநாத், ராஜேஷ் கிருஷ்ணன், புதுமுகம் ரகு ஆகியோர் நடிக்கவுள்ளனர். நாயகி இன்னும் சிக்கவில்லை. தேடிக் கொண்டிருக்கிறார்களாம்.
விக்ரம் இதற்கு முன்பு மலையாளம், தெலுங்கில் நிறையப் படங்களில் நடித்துள்ளார். தற்போது கன்னடத்திற்கும் கால் பரப்பியுள்ளார். அடுத்து இந்தியா?
தும்ப சந்தோஷா குரு!
Comments


Click it and Unblock the Notifications