இன்னும் காதல் வரலை!-விஷால்

By Staff

Vishal with Nayanatara
நாட்டில் எவ்வளவோ தலைபோகும் பிரச்சினைகள் இருக்க, எல்லோரும் என் காதல் -கல்யாணம் பற்றியே கேட்பது சங்கடமாக இருக்கிறது. எனக்கு காதல் வந்தால் உங்களுக்கு கட்டாயம் சொல்லியனுப்புகிறேன் என்கிறார் விஷால்.

சத்யம் படத்தின் இசை வெளியிடப்பட்டதையொட்டி, இன்று பத்திரிகையாளர்களைச் சந்தித்தார் விஷால்.

ரெஸிடென்ஸி டவரில் நடந்த இந்த சந்திப்பில் 100க்கும் மேற்பட்ட பத்திரிகையாளர்கள், 50க்கும் மேற்பட்ட புகைப்பட, வீடியோ கலைஞர்கள் குவிந்து விட்டனர்.

சந்திப்பின்போது விஷால் கூறியதாவது:

பல விஷயங்களைத் தள்ளிப் போட்டுவிட்டு இந்தப் படத்தின் ரிசல்டுக்காகக் காத்திருக்கிறேன். எத்தனையோ புதுப்பட வாய்ப்புகளைக் கூடத் தவிர்த்து விட்டேன். இந்த்தப் படத்தின் ரிசல் எதிர்பார்த்த மாதிரி அமைந்தால், சத்யம் படத்தின் இரண்டாம் பாகத்துக்குத் தயாராவோம். அந்த அளவு நம்பிக்கை தந்துள்ள படம் இது.

இதுவரை நான் 6 படங்களில் நடித்தேன். ஆனால் இந்தப் படத்துக்குத்தான் மிகப்பெரிய விளம்பரமும், எதிர்பார்ப்பும் கிடைத்துள்ளன. காரணம் என் மீது எப்போதும் அன்பு கொண்ட பத்திரிகையாளர்கள்.

ஆனால் மீண்டும் மீண்டும் என் காதல், கல்யாணம் பற்றி கேட்கிறீர்கள். அதுதான் சங்கடமாக இருக்கிறது. காதல் என்பது மிகப் புனிதமான, அழகான விஷயம். அதை நிச்சயம் திருட்டுத்தனமாக செய்ய மாட்டேன். அதற்கான அவசியமும் எனக்கு இல்லை.

இதைவிடுங்க... நாட்டில் இன்றைக்கு எவ்வளவோ தலைபோகிற விஷயங்கள் நடந்து கொண்டிருக்கின்றன.

அரசு எப்போது கவிழுமென்று தெரியாது, பெட்ரோல் விலை ஏறிப்போச்சு, பணவீக்கம் பயமுறுத்துது... இதையெல்லாம் விட பெரியதா என் காதல் விவகாரம்...? விட்டுத் தள்ளுங்க பாஸ்... காதல் வந்தா முதல்ல உங்களுக்குத்தான் சொல்லியனுப்பப் போறேன்... என்றார் எள்ளலாக.

அடுத்த ஆண்டு பிப்ரவரியில் தன் சொந்த இயக்கத்தில் புதுப்படம் பூஜைப் போடப் போவதாகக் குறிப்பிட விஷால், அடுத்த படத்தை தன்னுடன் இணை இயக்குநராகப் பணியாற்றிய புதுமுக இயக்குநருக்குக் கொடுத்துள்ளார்.

பெரிய நடிகர்களுக்கும் வராத துணிச்சல்தான்...!

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X