நடிகர் சூர்யா மகனுக்கு தேவ் என பெயர் சூட்டல்

By Sudha

நடிகர் சூர்யா, நடிகை ஜோதிகா தம்பதியினரின் மகனுக்கு தேவ் என பெயர் சூட்டியுள்ளனர்.

சூர்யா, ஜோதிகாவுக்கு ஏற்கனவே ஒரு பெண் குழந்தை உள்ளது. அந்தக் குழந்தைக்கு இருவரது பெயரிலிருந்தும் இரண்டு எழுத்துக்களைச் சேர்த்து தியா என பெயரிட்டனர். இந்த நிலையில் சமீபத்தில் ஜோதிகாவுக்கு ஆண் குழந்தை பிறந்தது. இந்தக் குழந்தைக்கு தற்போது தேவ் என பெயர் சூட்டியுள்ளனர்.

ஜோதிடரின் ஆலோசனையைக் கேட்டு அவர் கூறியபடி டி என்ற எழுத்தில் தொடங்குமாறு பெயர் வைத்துள்ளனராம்.

தி.நகரில் உள்ள சூர்யா வீட்டில் வைத்து பெயர் சூட்டல் நடந்தது. இதில் உற்றார் உறவினர்கள், நெருங்கிய நண்பர்கள் மட்டும் கலந்து கொண்டனர்.

இதே நிகழ்ச்சியின்போது சூர்யாவின் தங்கை பிருந்தாவின் மகனுக்கும் பெயர் சூட்டப்பட்டது. அந்தக் குழந்தைக்கு குகன் என பெயரிட்டுள்ளனராம்.

பெயர் சூட்டப்பட்டது குறித்து கருத்து தெரிவித்த சூர்யா, இது எனக்கு மிகவும் மகிழ்ச்சியான நாள் என்றார்.

சூர்யா பிறந்த நாள்-60 பேர் உடல் உறுப்பு தானம்:

இந் நிலையில் சூர்யாவின் பிறந்த நாளை அவர் ரசிகர்கள் விமர்சியாக கொண்டாடி வருகின்றனர்.

திருவான்மியூர் முத்து லட்சுமி மகப்பேறு மருத்துவமனையில் சூர்யாவின் பிறந்த நாளன்று பிறந்த 10 குழந்தைகளுக்கு ரசிகர்கள் தங்க மோதிரம் அணிவித்தனர்.

பின்னர் சூர்யா ரசிகர்கள் 60 பேர் தங்கள் உடல் உறுப்புகளை தானம் செய்தார்கள். சூர்யா பிறந்த நாளையொட்டி நடந்த சிறப்பு ரத்த தான முகாமில் ரசிகர்கள் 120 பேர் ரத்த தானம் செய்தனர்.

இந்த நிகழ்ச்சிகளில் அகில இந்திய சூர்யா ரசிகர் மன்ற தலைவர் பரமேஸ்வரன், செயலாளர் இரா.வீரமணி ஆகியோர் கலந்து கொண்டனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X