பில்லா 2- அஜீத் விலக முடிவு?

ரஜினி நடித்து மிகப் பெரிய வெற்றி பெற்ற பில்லா திரைப்படத்தை அஜீத்தை வைத்து ரீமேக் செய்தனர். அஜீத்தின் திரையுலக வாழ்க்கையில் பெரிய திருப்புமுனையைத் தந்தது அந்தப் படம்.
இந்தப் படத்துக்கு கிடைத்த வரவேற்பைப் பார்த்த சௌந்தர்யா, பில்லா இரண்டாம் பாகத்தைத் தயாரிக்க முடிவுசெய்து அதில் அஜீத்தை நடிக்குமாறு கேட்டிருந்தார். வார்னர் பிரதர்ஸ் நிர்வாகிகள் முன்னிலையில் இதற்கான பேச்சு வார்த்தையிலும் கலந்து கொண்ட அஜீத்துக்கு சம்பளமாக ரூ.10 கோடி பேசப்பட்டது. விஷ்ணுவர்தன் இயக்குவார் என்றும் கூறப்பட்டது.
இதுகுறித்து அதிகாரப்பூர்வமாக தகவல்களும் வெளியாகின.
இந்நிலையில், பில்லா படத்திலிருந்து விலகிக்கொள்ள அஜீத் முடிவெடுத்துள்ளதாகத் தெரிகிறது.
இதற்கு பல காரணங்கள் சொல்லப்பட்டாலும், இயக்குநர் விஷ்ணுவர்தன் நெருக்கடி காரணமாகவே, அஜீத் விலகுவதாகக் கூறப்படுகிறது. அஜீத்துக்கு இணையாக தனக்கும் ரூ.10 கோடி வரை சம்பளம் கேட்டதாகவும், இதற்கு சௌந்தர்யா ஒப்புக் கொள்ளவில்லை என்றும் கூறப்படுகிறது.
இந்தப் படத்தை விஷ்ணுவர்தன் இயக்காத பட்சத்தில் தான் படத்திலிருந்து விலகிக்கொள்வதாக அஜீத் கூறிவிட்டாரம்.
ஆனால் இத்தகவலை, அஜீத் தரப்போ, சௌந்தர்யா தரப்போ உறுதி செய்ய மறுத்து விட்டது.
உண்மை என்னவென்று அடுத்த சில தினங்களில் தெரிந்துவிடும்!


Click it and Unblock the Notifications











