'தல' நடிக்கும் தலைவன்!!
ஏகன் படத்துக்குப் பிறகு அஜீத் நடிக்கும் அடுத்த படத்துக்கு இப்போதே தலைப்பு ரெடி. தலைவன் என்ற பெயரை அஜீத்தே விரும்பி வைத்துள்ளாராம்.
விஜய்யை வைத்து மதுர படத்தை இயக்கிய மாதேஷ்தான் இந்த தலைவன் படத்துக்கு இயக்குநர்.
தலைவன் என்ற பெயரில் இதுவரை ஒரு படம்தான் வந்துள்ளது, தமிழில். அதுவும் மக்கள் திலகம் எம்.ஜி.ஆர்-ஜெயலலிதா நடித்த படம். இப்போது அந்தப் பெயரைத்தான் தனது படத்துக்கு தேர்ந்தெடுத்திருக்கிறார் அஜீத்.
விஜயகாந்த்தை வைத்து தான் இயக்கிக் கொண்டிருக்கும் அரசாங்கம் படத்தை முடித்த கையோடு, தலைவன் வேலைகளில் முழுமையாக இறங்கப் போவதாக நம்மிடம் தெரிவித்தார் மாதேஷ்.
படத்தின் கதை என்ன?:
அதை இப்போதே சொல்வது ஆபத்தாகப் போய்விடும். ஆனால் இதுவரை வெறுமனே, தல தல என்று சொல்லி மகிழ்ந்து கொண்டிருந்த அஜீத்தின் ரசிகர்கள், இனி அவரை தங்கள் தலைவர் என்று கொண்டாடும் அளவுக்கு ஒரு சிறப்பான கதை.
நான் சொன்ன ஒரே வரிக் கதையைக் கேட்டு மிகவும் மகிழ்ந்த அஜீத், இந்தக் கதையை கண்டிப்பாக செய்கிறோம்... என்று கூறிவிட்டார் என்கிறார் மாதேஷ்.
கலக்குங்க 'தல'!!


Click it and Unblock the Notifications











