அரசியல் ஒரு கடல், இறங்குவது சுலபமல்ல: விஜய்

வில்லு படம் திரையிட்ட திரையரங்குகளுக்குச் சென்று, ரசிகர்களை நேரில் சந்தித்து அவர்களை உற்சாகப்படுத்தி வருகிறார் நடிகர் விஜய்.
அதன் ஒரு பகுதியாக மதுரைக்கு வந்த அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், நான் நடித்த திரைப்படங்களில், திரையிட்ட 10 நாட்களில் வில்லு படத்திற்குத் தான் அதிக வசூல் கிடைத்துள்ளது. இப் படம் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் ரசிக்கும்படி உள்ளது.
இலங்கைத் தமிழர் பிரச்னையில் எனது உணர்வை வெளிப்படுத்துவதற்காக, நான் சென்னையில் உண்ணாவிரதம் இருந்தேன். மக்களுக்கு நற்பணி செய்வதும், சமூக உண்ர்வுடன் உண்ணாவிரதம் இருப்பதும் வேறு எந்த நோக்கத்திற்காகவும் அல்ல.
நான் அரசியலுக்கு வர வேண்டும் என்று என்பது தந்தை எஸ்.ஏ. சந்திரசேகரின் விருப்பம். சேவையுள்ளம் கொண்ட இளைஞர்கள் அரசியலுக்கு வர வேண்டும் என்று அவர் விரும்புகிறார்.
அரசியல் என்பது கடல் போன்றது. அதில் எவர் வேண்டுமானாலும் ஈடுபடலாம். ஆனால் அதில் இறங்குவது அவ்வளவு சுலபமல்ல. எனக்கு இப்போது அரசியல் பிரவேச ஆசையெல்லாம் கிடையாது என்றார் விஜய்.


Click it and Unblock the Notifications











