வித்யா என் சிறந்த தோழி-மாதவன்

By Staff

Madhavan with Vidya Balan
எனக்கும் வித்யா பாலனுக்கும் ஒரு ரகசிய உறவும் கிடையாது. இருவரும் இரண்டு படங்களில் சேர்ந்து நடித்தோம். அவ்வளவுதான் என்று கூறியுள்ளார் மாதவன்.

அவர் கூறுகையில்,

தமிழில் இப்போது மீண்டும் கவனம் செலுத்த ஆரம்பித்திருக்கிறேன். இந்தியாவின் எந்த மொழியில் நடித்தாலும், தமிழில் கிடைத்த பெயரைத் தக்க வைத்துக் கொள்வதுதான் எனக்குப் பிடித்திருக்கிறது.

எந்த மொழிக்குப் போனாலும் நான் சென்னைப் பையன்தான். எனக்குப் பிடித்த படம் எம்ஜிஆரின் உலகம் சுற்றும் வாலிபன்தான். அந்தப் படத்தை ரீமேக் செய்தால், நான் நடிக்கத் தயார்.

எனக்கும் வித்யா பாலனுக்கும் ஒரு ரகசிய உறவும் கிடையாது. இருவரும் இரண்டு படங்களில் சேர்ந்து நடித்தோம். அவ்வளவுதான். ஆனால் 'ஆன்ஸ்கிரீன் கெமிஸ்ட்ரி' நன்றாக ஒர்க் அவுட் ஆகிவிட்டதால் இப்படியெல்லாம் பேச்சு வருகிறது. அவர் என்னுடைய நல்ல தோழிகளில் ஒருவர் என்றார் மாதவன்.

தமிழில் அவர் நடித்து இந்த தீபாவளிக்கு வெளிவருவதாக இருந்த 'குரு என் ஆளு' தள்ளிப் போடப்பட்டிருக்கிறது.

இதுகுறித்து மாதவன் கூறுகையில், அது தயாரிப்பாளர் விருப்பம். எப்போது வெளியிட்டால் லாபம் பார்க்க முடியும் என அவருக்குத் தோன்றுகிறதோ அப்போது வெளியிடுவதுதானே சிறந்தது. ஒரு படத்தைத் தயாரித்ததன் மூலம் அந்த கஷ்டம் எனக்கும் தெரியும் என்றார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X