எல்லோரும் ரஜினி-கமல் ஆகிவிடுவதில்லை!: மம்முட்டி

By Chakra

Mammootty and Sneha
சினிமாவில் நடிக்கும் எல்லோரும் ரஜினி கமல் ஆகிவிடுவதில்லை. தோற்றவர்கள் ஏராளம். அவர்களுக்காகவும் வீடு கட்டித் தரும் முதல்வருக்கு நன்றி என்றார் மலையாள நடிகர் மம்முட்டி.

சென்னை பல்கலைக்கழகத்தின் நூற்றாண்டு விழா அரங்கில் நேற்று நடந்த பையனூர் கலைஞர் நகர் அடிக்கல் நாட்டு விழாவில் நடிகர் மம்முட்டி கலந்துகொண்டு பேசுகையில், "கலைஞர் இருக்கும் பெரும்பாலான மேடைகளில் நான் இருப்பேன். இன்று எனக்கு நோன்பு நாள். அப்படியிருந்தும் வந்துவிட்டேன்.

இன்று அடிக்கல் நாட்டியிருப்பது கலைஞர் நகரம் மட்டுல்ல; கலைஞர்களின் நகரம். சினிமா கனவுகளுடன் எல்லோரும் சென்னைக்கு வருகிறார்கள். அவர்கள் எல்லோரும் பாரதிராஜா, பாலசந்தர் ஆகிவிடுவதில்லை.

எல்லோரும் ரஜினி, கமல் ஆகிவிடுவதில்லை. நிறைய பேர் தோற்கிறார்கள். ஆனால் அதற்காக எல்லோரும் சென்னையை விட்டு திரும்பிவிடுவதில்லை.

இங்கேதான் ஏதாவது ஒரு வேலை செய்துகொண்டு, சினிமாவில் முயற்சித்துக் கொண்டே இருப்பார்கள். அவர்களுக்கும் சினிமா தவிர வேறு எதுவும் தெரியாது.

நாம் எல்லோரும் வெற்றி பெற்றவர்களை மட்டுமே பேசிக்கொண்டிருப்போம். தோல்வி அடைந்தவர்களைப் பார்க்கவே விரும்புவதில்லை.

சினிமா கனவுகளுடன் சொந்த வீடு இல்லாமல் சென்னையில் இன்றும் அல்லாடிக் கொண்டிருக்கிறார்கள் பல கலைஞர்கள். அவர்களுக்காக முதல்வர் கருணாநிதி இலவச வீடு கொத்திருக்கிறார்.

அதனால் அனைவரின் மனதிலும் கலைஞர் நிற்பார். பொதுவாக இந்த மாதிரி ஒரு திட்டத்தை நிறைவேற்ற முயன்றால் நிறைய எதிர்ப்புகள் இருக்கும். அதையும், இதையும் சொல்லி இத்தகைய திட்டங்களையே நிறுத்திடுவார்கள்.

ஆனால் கலைஞர் இப்படியொரு திட்டத்தை நினைத்தது போலவே முடித்துவிட்டார். அதற்காக அவர் யாரையெல்லாம் எப்படியெல்லாம் சமாளித்திருப்பார் என்பதை நினைத்தால் பிரமிப்பாக உள்ளது," என்றார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X