நடிகர் முரளிக்கு அஞ்சலி கூட்டம்... நடிகர் சங்கம் ஏற்பாடு

இதுகுறித்து தென்னிந்திய நடிகர் சங்கம் சார்பில் அதன் தலைவர் சரத்குமார், பொதுச் செயலாளர் ராதாரவி, பொருளாளர் வாகை சந்திரசேகர் ஆகிய மூவரும் வெளியிட்டுள்ள அறிக்கை:
"தமிழ் திரையுலகில் புகழ்பெற்ற கதாநாயகர்களில் ஒருவர், முரளி. கடந்த 8.9.2010 அன்று எதிர்பாராதவிதமாக அவர் இயற்கை எய்தினார். அவருடைய நினைவை போற்றும் வகையில், வருகிற 26-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) மாலை 6 மணிக்கு, நடிகர் சங்கத்தில் அமைந்துள்ள சாமி சங்கரதாஸ் கலையரங்கில் நடிகர் சங்கம் சார்பில் அஞ்சலி கூட்டம் நடைபெறுகிறது.
கூட்டத்தில் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம், தென்னிந்திய திரைப்பட வர்த்தகசபை, கில்டு, தென்னிந்திய திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளனம், வினியோகஸ்தர்கள் சங்கம், திரையரங்க உரிமையாளர்கள் சங்கம் என தமிழ் திரையுலக அனைத்து பிரிவினரும் கலந்துகொள்கிறார்கள்.''
-இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications











