twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    நான் பக்குவமாயிட்டேன்-அஜீத்

    By Staff
    |

    Ajith with Nayanatara
    ஒவ்வொரு படத்தின் வெளியீட்டுக்கு முன் அல்லது வெளியான அடுத்த நாள் பத்திரிகையாளர்களைச் சந்திப்பது அஜீத்தின் பாணி.

    முன்பெல்லாம் இந்தமாதிரி சந்திப்பின் போது நிறைய பேசுவார் அஜீத். ஆனால் அந்தப் பேச்சின் 'பலன்'களை நிறைய அனுபவித்து விட்டதாலோ என்னமோ இப்போது முழுமையாக அடக்கி வாசிக்கிறார்.

    ஆனால் ஒவ்வொரு பத்திரிகையாளரிடமும் நிறைய நேரம் தனிப்பட்ட முறையில் பேசுகிறார். ஆனால் எதுவும் பத்திரிகையில் போடுவதற்கல்ல!.

    ஏகன் திரைப்படம் தீபாவளிக்கு வெளியாவதையொட்டி 300க்கும் மேற்பட்ட பத்திரிகையாளர்களுக்கு சென்னை அடையாறு பார்க் ஷெராட்டன் ஓட்டலில் விருந்து கொடுத்தார் அஜீத்.
    மாலை 6 மணிக்கு ஆரம்பித்த இந்த சந்திப்பு இரவு 10 வரை நீண்டது. பத்திரிகையாளர்கள் எவ்வளவோ வற்புறுத்தியும்கூட அஜீத் எதுவும் பேச மறுத்துவிட்டார்.

    என்ன காரணம்? இதற்கு அஜீத் அளித்த பதில்:

    பொதுவா நான் பேச ஆரம்பிச்சாலே, நான் சொல்ல வந்த விஷயத்தை திசை திருப்பிடறாங்க. நான் தெரிவிக்க நினைக்கிறது ஒரு விஷயமா இருக்கும். ஆனால் மக்களைச் சென்று சேரும்போது அதுவே வேறு செய்தியாக இருக்கும்.

    இப்படித்தான் என் பெயர் தேவையில்லாத சிக்கலில் பல முறை சிக்கிக் கொண்டது சில ஆண்டுகளுக்கு முன். இப்போதுதான் அந்த மாதிரி வீண் வம்புகளில் சிக்காமல் இருப்பது எப்படின்னு கத்துக்கிட்டேன்.

    வாழ்க்கையில் 37 வருடங்கள் நான் சந்தித்த அனுபவங்கள் என்னைப் பக்குவப்படுத்தி இருக்கிறது. அதனால், ஆன்மிக நாட்டம் அதிகரித்துள்ளது. நடிக்க வந்து 17 வருடமாகி விட்டது. எதை அடைய நினைத்தேனோ அது நடந்திருக்கிறது. சில காலம் மீடியாக்களிடம் நான் பேசவில்லை. இதற்கு முன் அந்தந்த வயதுக்கேற்ற அனுபவத்தை வைத்து காரசாரமாகப் பேசினேன்.

    ரஜினி சார் ஒருமுறை என்கிட்ட இப்படிச் சொன்னார்: நிறைய செய்யுங்க… குறைவா பேசுங்கன்னு. இதான் இனி என் வழியும். ஒருவனுக்கு எது நல்ல நேரம், எது கெட்ட நேரம் என்பது அவனது பேச்சிலேயே தெரியும். பேச்சை எவ்வளவு குறைக்கிறோமோ அவ்வளவு சக்தி கூடும். இதை நான் இப்போதான் தெரிஞ்சிக்கிட்டேன். ரஜினி கொடுத்த 'இமாலயன் மாஸ்டர்ஸ்' புத்தகம் தான் இப்போ என்னோட குரு.

    சினிமாவில் இந்தளவு நான் வளர காரணம், என் ரசிகர்கள். அவர்கள் தரும் ஆதரவுக்கும், ஊக்கத்துக்கும் நான் கடமைப்பட்டுள்ளேன். எந்தப் பிரச்னையிலும் சிக்காமல் ஒதுங்கிப் போகிறேன்.

    நல்ல பெயர் வாங்கவில்லை என்றாலும் பரவாயில்லை. கெட்டப்பெயர் வாங்கக்கூடாது என்பதில் தெளிவாக இருக்கிறேன். அதையும் மீறி கெட்டப் பெயர் வந்தால், அதை விதி என்றுதான் சொல்ல வேண்டும்.

    இப்ப என்ன தெரியணும் என்னைப் பத்தி?. நான் சந்தோஷமா இருக்கேன். நல்ல மனிதர்கள் இப்போ என்னைப் பத்திப் புரிஞ்சிக்கிட்டாங்க அதுவே போதும் எனக்கு என்றார்.

    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X