பிருத்விராஜுக்கு ரகசிய திருமண நிச்சயதார்த்தம்!
பிரபல மலையாள - தமிழ் நடிகர் பிருத்விராஜ் திருமண நிச்சயதார்த்தம் சமீபத்தில் ரகசியமாக கேரளாவில் நடந்துமுடிந்தது.
மொழி படம் மூலம் பிரபலமானவர் பிருதிவிராஜ். இவருக்கும் மும்பை டி.வி.சேனல் ஒன்றில் நிருபராக பணியாற்றும் பிரதிக்ஷா மேனனுக்கும் காதல் ஏற்பட்டது.
இவர்கள் காதலை இரு வீட்டு பெற்றோரும் ஏற்றுக் கொண்டனர். திருமணம் செய்து வைக்கவும் முடிவு செய்தனர்.
இந்த நிலையில், சமீபத்தில் பிருத்விராஜ் வீட்டில் வைத்து ரகசியமாக இருவருக்கும் திருமண நிச்சயதார்த்தம் நடந்ததாகக் கூறப்படுகிறது. நெருங்கிய நண்பர்களைக் கூட இந்த நிகழ்ச்சிக்கு பிருத்விராஜ் அழைக்கவில்லையாம்.
அடுத்த மாதம் (ஏப்ரல்) திருவனந்தபுரத்தில் திருமணத்தை நடத்த ஏற்பாடுகள் நடக்கிறது. பிருதிக்ஷாவுக்கு 26 வயது ஆகிறது. ஜர்னலிஸத்தில் பட்ட மேற்படிப்பு படித்துள்ளார். மும்பையில் உள்ள பந்த்ரா பகுதியில் வசிக்றார்.
திருமணம் பற்றி பிரதிக்ஷா தரப்பில் எதுவும் கூற மறுத்துவிட்டது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











