மலையாளத்தில் சாந்தனு

மலையாளத்தில் மோகன் லால் நடிக்கும் ஏஞ்செல் ஜான் படத்தி்ல் முக்கிய பாத்திரத்தில் நடிக்கவுள்ளார் சாந்தனு. மோகன்லாலும் கூட இப்படத்தில் கேமியோ ரோலில்தான் நடிக்கிறார். ஜெயசூரியா படத்தை இயக்குகிறார்.
கே.கே.நாராயண் தாஸ் படத்தைத் தயாரிக்கிறார். மலையாளத்தில் சாந்தனு நடிப்பது இதுவே முதல் முறையாகும். ஜெயசூர்யாவும், மனாப் என்பவரும் இணைந்து படத்தின் திரைக் கதையை வடிவமைத்துள்ளனர். கதை மனாப்.
படத்தில் பாமா, ஜெகதி ஸ்ரீகுமார், சூரஜ் வெஞ்சரமூடு, பீமன் ரகு, பைஜு, கீதா உள்ளிட்டோரும் நடிக்கின்றனர்.
சுபாஷ், சசீந்திர வர்மா பாடல்களை எழுத ஊசுப்பச்சன் இசையமைக்கிறார். அஜயன் வின்சென்ட் கேமராவைக் கையாளுகிறார்.
கொச்சியில் படப்பிடிப்பு தொடங்குகிறது.
Comments


Click it and Unblock the Notifications