சிம்பு கால் முறிந்தது

சில மாதங்களுக்கு முன் நமீதா-லேகா வாஷிங்டன் ஜோடியாக நடிக்க கெட்டவன் என்ற படத்தை ஆரம்பித்தார் சிம்பு.
ஆனால் என்ன காரணத்தாலோ, பாதிப் படம் முடிந்த நிலையில் அதிலிருந்து லேகாவை தூக்குவதாக அறிவித்தார். ஆனால் பின்னர் அதுபற்றி உறுதியாக எந்த அறிவிப்பையும் அவர் வெளியிடவில்லை. லேகாவுக்குப் பதில் வேறு புதுநடிகை யார் என்றும் அவர் கூறவில்லை. சிலம்பாட்டம் படத்தில் மும்முரமாக இறங்கிவிட்டிருந்த சிம்பு, இப்போது மீண்டும் கெட்டவன் படத்தை முதலிலிருந்து ஆரம்பிக்கப் போவதாக அறிவித்தார்.
அதன்படி சில தினங்களுக்கு முன் படப்பிடிப்பு துவங்கியது. வாலி எழுதிய கெட்டவன்... எனத் துவங்கும் பாடல் படமாக்கப்பட்டது.
படத்தில் சிம்புவின் பாத்திரத்துக்கு அறிமுகப் பாடல் இது என்பதால் இந்தப் பாடலுக்கான நடனம் மிகவும் வித்தியாசமாக அமைய வேண்டும் என டான்ஸ் மாஸ்டர் அசோக்ராஜிடம் கேட்டுக் கொண்டார் சிம்பு. எனவே மிகவும் சிரமமான சில நடன அசைவுகளை இப்பாடலுக்காக வடிவமைத்திருந்தார் அசோக். அதில் ஒரு மூவ்மெண்டை ஆடும்போதுதான் சிம்பு கீழே விழுந்து காலை உடைத்துக் கொணடார்.
விழுந்த வேகத்தில் அய்யோ அம்மா என அவர் அலறியதில் படப்பிடிப்புக் குழுவே ஆடிப்போனதாம். ஆனாலும் பின்னர் வலியைத் தாங்கிக் கொண்டு நடனத்தை ஆடி முடித்தாராம். பின்னர் டாக்டர்கள் வந்து பார்த்து பரிசோதித்து சில தினங்கள் ஓய்வெடுக்குமாறு அறிவுறுத்தியுள்ளனர். இதைத் தொடர்ந்து ஒரு மருத்துவமனையில் எக்ஸ்ரே எடுத்ததில், அவரது முழங்காலுக்குக் கீழே லேசாக எலும்பு முறிவு உள்ளதாகத் தெரிய வந்துள்ளது.
இப்போது பூரண ரெஸ்டில் உள்ளார் சிம்பு. கால் சரியாகி, கெட்டவன் ஷூட்டிங் முடிந்த பிறகுதான் திரு போடா, திருமதி போடி படத்துக்காக கனடா செல்லப் போகிறார், 3 மாதப் பயணமாக.


Click it and Unblock the Notifications











