மாவட்டத் தலைநகரங்களில் அரசாங்கம் ஆடியோ ரிலீஸ்!

விஜயகாந்த நடித்துள்ள 150வது படம் அரசாங்கம். பிரமாண்ட பொருட் செலவில் உருவாகியுள்ள அரசாங்கம் ரிலீஸுக்குத் தயாராகியுள்ளது. மாதேஷ் இதை இயக்கியுள்ளார்.
சமீப காலத்தில் வெளியான விஜயகாந்த் படங்கள் தொடர்ந்து தோல்வியைத் தழுவி வருவதால், அரசாங்கத்தை விஜயகாந்த் மட்டுமல்லாமல், அவரது கட்சியினரும், ரசிகர்களும் கூட வெகுவாக எதிர்பார்த்துள்ளனர்.
இந்த நிலையில் படத்தின் ஆடியோ வெளியீடு மார்ச் 28ம் தேதி நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. வித்தியாசமாக சென்னையில் மட்டும் நடத்தாமல், தமிழகம் முழுவதும் மாவட்டத் தலைநகரங்களில் ஒரே நேரத்தில் ஆடியோ வெளியீடு நடைபெறவுள்ளதாம்.
மாவட்டங்களில் தேமுதிக மாவட்டச் செயலாளர்கள் ஆடியோ வெளியீட்டில் கலந்து கொள்ளவுள்ளனர்.
அரசாங்கம், ஏப்ரல் 14ம் தேதியன்று திரைக்கு வருகிறது.
'அரசு'க்கு அச்சாரமிடுமா இந்த அரசாங்கம்?
Comments


Click it and Unblock the Notifications