சூர்யாவுக்கு இன்று 35 வயது!
பார்ப்பதற்கு ஏதோ கல்லூரியில் படிக்கும் இளைஞன் மாதிரி தெரிந்தாலும், சூர்யாவுக்கு இப்போது வயது 34 முடிந்து 35. ஆம்... இன்றுதான் (ஜூலை 23) அவருக்குப் பிறந்த நாள்.
வழக்கமாக பிறந்தநாளன்று சென்னையில் இருந்தால் ரசிகர்களுடன் கொண்டாட்டம், குடும்பத்துடன் சாமி தரிசனம், மாலையில் நண்பர்களுடன் பார்ட்டி என கொண்டாடி மகிழும் சூர்யாவுக்கு, இந்த ஆண்டு அது முடியாமல் போய்விட்டது. காரணம், ஆதவன் படத்தின் இறுதிக் கட்டப் படப்பிடிப்புக்காக அவர் தென் ஆப்ரிக்காவின் கேப்டவுன் நகரில் முகாமிட்டிருப்பதுதான்.
எனவே இந்த பிறந்த நாளை நயன்தாரா மற்றும் யூனிட்டிலுள்ளவர்களுடன் சேர்ந்து கொண்டாடுகிறார் சூர்யா.
ஆதவனுக்குப் பிறகு அவர் நடிக்கும் படம் ஹரியின் சிங்கம். இந்தப் படத்தில் அவருக்கு ஜோடி அனுஷ்கா. தென்னாப்பிரிக்காவிலிருந்து வரும் ஜூலை 27-ம் தேதி திரும்பும் சூர்யா, அடுத்த வாரமே சிங்கம் படப்பிடிப்பில் கலந்து கொள்கிறார்.


Click it and Unblock the Notifications












