ஸ்டார்ட்... காமிரா... ஆக்ஷன்...விஜய்காந்த்!

அவரது மச்சான் சுதீஷ் தயாரிக்கிறார் இந்தப் படத்தை. விஜய்காந்த் முதல் முறையாக இயக்குநர் அவதாரம் எடுக்கிறார். படத்துக்குப் பெயர் விருதகிரி.
இந்தப் படத்தின் துவக்க விழா இன்று சென்னை சைதாப்பேட்டையில் உள்ள ரேகா ஹவுஸில் படப்பிடிப்புடன் நடந்தது. வழக்கம்போல இந்தப் படத்திலும் கடமையே தவறாத நல்ல போலீஸாக நடிக்கிறார் விஜய்காந்த்.
விஜய்காந்துக்கு கலைராணி ஆரத்தி எடுப்பது போல முதல்காட்சி படமாக்கப்பட்டது (செண்டிமெண்டுங்னா!). உடன் மீரா கிருஷ்ணன் போன்றவர்கள் நடித்தனர்.
இப்படத்துக்கு எஸ்.கே. பூபதி ஒளிப்பதிவு செய்ய சுந்தர் சி.பாபு இசையமைக்கிறார். பிஆர்ஓ சிங்கார வேலு.
தான் எம்எல்ஏவாக வென்ற விருத்தாச்சலம் தொகுதியின் பெயர் வருவதுபோல இந்தப் படத்துக்கு விருதகிரி என்று பெயர் சூட்டியிருக்கிறாராம் கேப்டன்!
Comments


Click it and Unblock the Notifications