தெய்வத் திருமகன் படத் தலைப்பு விவகாரத்தில் சீக்கிரமே நல்ல முடிவு வரும் என்றார் விக்ரம்.
தெய்வத் திருமகன் படத் தலைப்பு விவகாரத்தில் சீக்கிரமே நல்ல முடிவு வரும் என்றார் விக்ரம்.
நடிகர் விக்ரமின் அடுத்த வெளியீடான தெய்வத் திருமகன் படத் தலைப்பு பெரும் சிக்கலுக்கு உள்ளாகியுள்ளது. இந்தத் தலைப்பை வைக்கக் கூடாது என தேவர் இன அமைப்புகள் கொடிபிடித்துள்ளன. சிவசேனா கட்சியும் எதிர்ப்பு தெரிவித்து, முதல்வரிடம் மனு கொடுத்துள்ளது.
படத்தின் கதை ஒரு மன நிலை பாதிக்கப்பட்டவரைச் சுற்றி அமைந்துள்ளதால், முத்துராமலிங்கத் தேவரைக் குறிக்கும் இந்தத் தலைப்பை வைக்கக் கூடாது என்பது இவர்கள் வாதம்.
இந்த நிலையில் பத்திரிகையாளர்களைச் சந்தித்த விக்ரமிடம் இந்த விவகாரம் குறித்துக் கேட்கப்பட்டது.
அவர் கூறுகையில், எதிர்ப்பு தெரிவித்துள்ள அமைப்புகளிடம் படத்தின் தயாரிப்பாளர் பேசி வருகிறார். எதிர்ப்பு தெரிவிக்கும் அளவுக்கு இதில் விவகாரம் ஒன்றுமில்லை. படம் பார்த்தால் அவர்களே புரிந்து கொள்வார்கள். நல்ல முடிவு வரும் என நம்புகிறேன்," என்றார்.


Click it and Unblock the Notifications











