மராத்தியில் படம் எடுக்கும் அமிதாப்

ஏபி கார்ப்பரேஷன் என்ற தனது சொந்த பேனரில் இப்படத்தைத் தயாரிக்கப் போகிறார் அமிதாப் பச்சன். மராத்தி மொழி மீது தனக்குள்ள பாசத்தை, அன்பை வெளிப்படுத்தும் வகையில் மராத்தியில் படம் எடுக்கத் திட்டமிட்டுள்ளார் அமிதாப்.
உமேஷ் குல்கர்னி இப்படத்தை இயக்குவார். படத்திற்கு இன்னும் பெயரிடப்படவில்லை. இதுகுறித்து உமேஷ் கூறுகையில், நான் இந்திய திரைப்பட கல்லூரியில் படித்தபோது ஜெயா பச்சன் எனக்கு சீனீயர். திரைப்படக் கல்லூரியில் படித்தபோதூ நான் இயக்கிய கிர்னி என்ற படத்தை அவர் பார்த்து பெரிதும் பாராட்டியிருந்தார். சமீபத்தில் நான் இயக்கிய வாலு என்ற படமும் அவரைக் கவர்ந்து விட்டது.
இதையடுத்து தனது பேனரில் புதிய படம் இயக்க எனக்கு அழைப்பு விடுத்தார். இது எனக்கு மகிழ்ச்சி தருகிறது. இப்படத்தை மராத்தியில் இயக்க வேண்டும் என நாங்கள் தீர்மானித்தோம் என்றார்.
இப்படத்தின் கதை 12 வயது சிறுவனின் கதையாம். அதேசமயம் குழந்தைளுக்கான படமாக இது இருக்காது என்றும் கூறுகிறார் குல்கர்னி.
ஆகஸ்ட்-செப்டம்பரில் படத்தை ஆரம்பித்து முடிக்கத் திட்டமிட்டுள்ளனராம். நடிக, நடிகையர் குறித்து இன்னும் தீர்மானிக்கவில்லை. புனே மற்றும் மகாராஷ்டிராவின் இதரப் பகுதிகளில் படப்பிடிப்பு இருக்குமாம்.


Click it and Unblock the Notifications











