இளைய சூப்பர் ஸ்டார் பட்டம்: தனுஷ் யோசனை!!

By Staff

Dhanush with Tamanna in Padikkathavan
இளைய சூப்பர் ஸ்டார் என ரசிகர்கள் எனக்குப் பட்டம் சூட்டியுள்ளனர். அதை வெளிப்படையாக அறிவிப்பது குறித்து யோசித்து வருகிறேன் என்று நடிகரும் ரஜினியின் மருமகனுமான தனுஷ் கூறியுள்ளார்.

படித்துப் பட்டம் வாங்குகிறார்களோ இல்லையோ, நடிக்க வந்த ஒரே படத்தில் பட்டத்துடன் வளைய வருகின்றனர் இந்தக் காலத்து இளம் ஹீரோக்கள்.

இது ரசிகர்கள் வைத்த பட்டம் என்று வெளியில் சொல்லிக் கொண்டாலும், உள்ளூர தங்களது பட்டத்தை ரசிக்கத்தான் செய்கிறார்கள் நடிகர்கள்.

சிம்புவுக்கு அவரது அப்பா ரொம்ப காலத்துக்கு முன்பே லிட்டல் சூப்பர் ஸ்டார் என்று பட்டமிட்டு விட்டார். இன்று அவருக்கு மன்மதன், கெட்டவன், வல்லவன் என்று ஆளாளுக்கு ஒரு பெயர் சூட்டிக் கொண்டிருப்பது வேறு கதை.

இந்த நிலையில், சிம்புவின் 'எதிரி'யாக பார்க்கப்படும் தனுஷுக்கும் பட்டத்து மோகம் வந்து விட்டதாம்.

தனுஷ், தமன்னா நடித்துள்ள படம் 'படிக்காதவன்'. சுராஜ் இயக்கியுள்ளார். சன் பிக்சர்ஸ் வழங்கியுள்ள இந்தப் படம் பொங்கலுக்கு ரிலீஸானது.

இந்தப் படம் குறித்து பல்வேறு எதிர்மறை கருத்துக்கள், விமர்சனங்கள் உள்ள நிலையில், படம் பிரமாண்ட வெற்றி பெற்றதாக தனுஷ் அறிவித்துள்ளார். மேலும் தமிழகத்தின் பல பகுதிகளில் இந்தப் படம் ஓடும் தியேட்டர்களுக்கு நேரில் சென்று ரசிகர்களுடன் படம் பார்த்து கூட்டம் சேர்க்கும் முயற்சியிலும் மும்முரமாக உள்ளார்.

விழுப்புரம் முருகா தியேட்டரில் திரையிடப்பட்டுள்ள இந்தப் படத்தை ரசிகர்களுடன் பார்ப்பதற்காக, படத்தின் ஹீரோ தனுஷ் நேற்று வந்தார்.

மயிலாட்டம், ஒயிலாட்டம், தாரை, தப்பட்டை முழங்க, பட்டாசு வெடித்தும், ஆரத்தி எடுத்தும் அவரை வரவேற்றனர்.

படம் பார்த்து விட்டு ரசிகர்களிடையே தனுஷ் பேசியதாவது:

'இளைய சூப்பர் ஸ்டார்' பட்டத்தை நான் பயன்படுத்த வேண்டும் என்று நிறைய ரசிகர்கள் கூறுகிறார்கள்.

அதை ஏற்க நிறைய தகுதி வேண்டும். உங்களது கோரிக்கையை ஏற்று அந்த பட்டத்தை போடுவதற்கு யோசித்துக் கொண்டிருக்கிறேன்.

இந்தப் படம் பிரமாண்ட வெற்றி பெற்றுள்ளது. இதற்கு முதல் காரணம் சன் பிக்சர்ஸ், இரண்டாவது ரசிகர்கள், என்றார் தனுஷ்.

லிட்டில் சூப்பர் ஸ்டாருக்கும், இளைய சூப்பர் ஸ்டாருக்கும் ஏதாவது வித்தியாசமிருந்தா சொல்லுங்களேன்!

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X