twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    உஷாரான ஆமிர் கான்!

    By Staff
    |

    Aamir Khan with wife Kiran
    நான் பிறந்தது, வளர்ந்தது எல்லாம் மகாராஷ்டிராவில்தான். எனவே நான் மராட்டி தான் என்று ஆமிர்கான் தானாகவே சுய 'வாக்குமூலம்' அளித்துள்ளார்.

    சிவசேனா மற்றும் மகாராஷ்டிர நவ நிர்மான் சேனா ஆகியவற்றுக்கு இடையில் சிக்கி பாலிவுட் சூப்பர் ஸ்டார்கள் படாதபாடு பட்டு வருகிறார்கள். ஆரம்பத்திலிருந்து மகாராஷ்டிர நவ நிர்மான் சேனா அமிதாப்பைக் குறி வைத்து கடுமையாக தாக்கி வருகிறது.

    பதிலுக்கு ஷாருக் கானை டெல்லிக்காரருக்கு இங்கு என்ன வேலை என்று கேட்டு சிவசேனா வம்பிழுத்து வருகிறது.

    இந் நிலையில், கான் வரிசை நடிகர்களில் முக்கியமானவரான ஆமிர்கான், தானாக முன்வந்து நான் மராத்திக்காரன் என கூறியுள்ளார். நான் மகாராஷ்டிராவில் பிறந்தவன், வளர்ந்தவன். எனவே நானும் மராட்டி தான் என்று கூறியிருக்கிறார் ஆமிர்கான்.

    அவருடைய லகான் படத்தை மராத்திக்காரரன அசுதோஷ் கோவரிகர் இயக்கினார். தாரே ஜமீன் பர் படத்தின் கதையை எழுதியவர் அமோல் குப்தே. இவரும் மராட்டியர் தான். இதை ராசியாக நினைக்கிறீர்களா என்ற கேள்விக்கு ஆமிர் பதிலளிக்கையில், நான் மகாராஷ்டிராவில் பிறந்து வளர்ந்தவன். நானும் மராத்திதான். எனவே அதை பெருமையாகவே நினைக்கிறேன் என்றார் ஆமிர்.

    தொடர்ந்து அவர் கூறுகையில், மொழி ஒரு பிரச்சினை இல்லை. நாம் ஒரே நாட்டில்தான் வாழ்கிறோம். நமது நாட்டில் பல கலாச்சாரங்கள், மொழிகள் உள்ளன. ஒவ்வொரு கலாச்சாரத்தையும், மொழியையும் நாம் மதிக்க வேண்டும். திரைப்படங்கள் இந்த எல்லைகளுக்கு அப்பாற்பட்டவை என்றார்.

    மேலும், நாம் அரசியல்வாதிகளிடம் கவனமாக இருக்க வேண்டும். ஒரு தொலைவிலேயே இருக்க வேண்டும் என எனது நண்பர்களிடம் நான் கூறுவதுண்டு. அவர்கள் மொழியால், மதத்தால், ஜாதியால் மற்றவர்களைப் பிரித்து விடுவார்கள். முன்னேற்றத்துக்காகவும், மக்கள் நலனுக்காகவும் பாடுபடும் தலைவர்களைத்தான் நாம் ஆதரிக்க வேண்டும் என்றார் ஆமிர்.

    ஆமிர் ரொம்பத் தெளிவாகவும், உஷாராகவும் இருக்கிறார்.

    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X