ரவியை 'தொங்கலில்' விட்ட ஜனா!

ஏதோ தண்டனைக்காக அப்படித் தொங்கவில்லை, தான் அடுத்து நடிக்கப்போகும் பேராண்மை படத்துக்காகத்தான் இந்தத் தொங்கல்.
எதற்காக இப்படி...
ஏதோ ஐந்து ஹீரோயின்கள் நடிக்கும் படமாச்சே... கொஞ்சம் ஜாலியா டைம் பாஸாகும்னு நெனச்சு ஷூட்டிங் போனேன். திருநெல்வேலிப் பக்கம் அடர்ந்த காட்டுப் பகுதியில் ஷூட்டிங். ஹீரோயின்கள் யாரும் கண்ணில் படவே இல்லை. என்னைக் கூப்பிட்ட இயக்குநர் ஒரு பெரிய மரத்தின் கிளையில் தொங்கச் சொன்னார்...
நானும் அப்படியே செய்தேன். இப்போ கூப்பிடுவார், அப்போ கூப்பிடுவார்னு பார்த்தா... கடைசி வரைக்கும் கூப்பிடவேயில்லை. ஒரு நாளெல்லாம் தொங்க வேண்டியதாப் போச்சு. அதுக்கப்புறம் ஹீரோயின்கள் நடிக்கிற சீன்களை தனியை எடுத்துட்டார் போங்க, என்றார் ஜெயம் ரவி சோகத்துடன்.
அப்ப பேராண்மை ஷூட்டிங் ரொம்ப கஷ்டம்னு சொல்லுங்க....
அய்யோ... அப்படியெல்லாம் எழுதிடப் போறீங்க... நான் என்னோட அனுபவங்களை சும்மா ஜாலியா சொன்னேன். மற்றபடி ஜனநாதன் மாதிரி ஒரு திறமயான இயக்குநருடன் வேலை செய்ய நான் கொடுத்து வைத்திருக்க வேண்டும். அவருடைய எண்ணங்கள் இந்திய சினிமா எல்லைகளைக் கடந்தவை. ஒரு சராசரி இந்திய சினிமாவுக்கும் ஜனநாதன் எடுக்கிற சினிமாவுக்கும் என்ன வித்தியாசம் என்பதை ஈ படத்தில் சாம்பிள் பார்த்திருப்பீர்கள்.
இப்போது அதையும் மிஞ்சும் வகையில் உலகத் தரத்தில் உருவாகிக் கொண்டிருக்கும் படம் பேராண்மை. பெருமையாக இருக்கிறது...' என்றார் ரவி.
கடைசி வரைக்கும் இதே நினைப்பிருந்தா சரி!


Click it and Unblock the Notifications











