யு.ஏ.இ. நாடகத்தில் மோகன்லால்

மனதின் பிரதிபலிப்பு என்ற அர்த்தம் வரும் சாயாமுகி நாடகம் கேரளாவில் புகழ் பெற்றது. கேரளாவில் இந்த நாடகம் அரங்கேற்றபோது அதில் மோகன்லால் நடித்திருந்தார்.
இந்த நிலையில் இந்த நாடகம் தற்போது ஐக்கிய அரபு எமிரேட்ஸ் போகிறது. அங்கும் மோகன்லால் நடிக்கிறார். கூட நடிக்கிறார் நடிகர் முகேஷ். இவர் சரிதாவின் கணவர் என்பது குறிப்பிடத்தக்கது.
மகாபாரதத்தை அடிப்படையாக வைத்து உருவாக்கப்பட்ட நாடகம் இது. துபாய், அபுதாபி, ரஸ் அல் கைமா ஆகிய நகரங்களில் இந்த நாடகம் நடத்தப்படவுள்ளது.
கேரளாவைத் தாண்டி வெளிநாடு ஒன்றில் சாயாமுகி அரங்கேற்றப்படுவது இதுவே முதல் முறை.
துபாயில் அக்டோபர் 30ம் தேதியும், அபுதாபியில் 31ம் தேதியும், ரஸ் அல் கைமாவில் நவம்பர் 2ம் தேதியும் சாயாமுகி அரங்கேறுகிறது.
நவம்பர் மாதம் மேலும் பல வளைகுடா நாடுகளில் சாயாமுகி அரங்கேற்றப்படவுள்ளதாம்.
Comments


Click it and Unblock the Notifications