இதுவரை நான் நடித்ததெல்லாம் மொக்கைப் படம்! - சிவா

By Chakra

பரபரப்பாக செய்திகளில் அடிபட போகிற போக்கில் ஒரு பிட்டைப் போடுவது இளம் நாயகர்களின் பாணி போலிருக்கிறது. முன்பு ஜெய்... இப்போது இவரது 'பிலிம்மேட்'டான சிவா!

இன்று நடந்த 'பதினாறு' படத்தின் இசை வெளியீட்டு விழாவில் பேசிய சிவா, இதுவரை நான் நடித்த படங்கள் எல்லாமே மொக்கைதான்... இந்தப் படம்தான் நல்ல படம், என்றார்.

பரதன், விஐபி, புன்னகை பூவே போன்ற படங்களை இயக்கிய டி சபாபதி இயக்கும் படம் பதினாறு. பாஷன் மூவி மேக்கர்ஸ் சார்பில் சிவசங்கர் தயாரிக்கும் இந்தப் படத்தில் சிவா - மதுஷாலினி நடிக்கிறார்கள். யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார்.

இசைவெளியீட்டு விழாவில் சிவா பேசுகையில், "இதற்கு முன் நான் சென்னை 28 படம் பண்ணேன். அந்தப் படம் எப்படி கவுதம் மேனன் கேட்டார். மொக்கைப் படம் என்றேன். அடுத்து தமிழ்ப் படம்... அதைப் பற்றி அவருக்கே தெரிந்துவிட்டது போலிருக்கிறது. கேட்கவே இல்லை. அடுத்தடுத்த படங்களும் அப்படித்தான். எல்லாம் மொக்கைப் படங்கள். இந்தப் படம்தான் சீரியஸாக நான் பண்ண நல்ல படம்..", என்றார்.

கூடவே ஒரு கமெண்டையும் சொன்னார்... 'நாளைலருந்து நான் பரபரப்பா நியூஸ்ல வருவேன்', என்று. நியூஸ்ல வரணும்ங்கற ஆசை சரிதான். ரூட்டு தப்பாருக்கே...!

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X