விஜய்-பிரபுதேவா-நயனதாரா

தற்போது தமிழில் விஷாலுடன் சத்யம், தனுஷூடன் யாரடி நீ மோகினி படங்களில் நடித்து வருகிறார் நயன்தாரா.
குசேலனில் சூப்பர் ஸ்டார் ரஜினியின் நாயகியான கையோடு (தமிழ் - தெலுங்கு இருமொழிகளிலும்), இளைய தளபதி விஜய்க்கும் இப்போது நாயகியாகி விட்டார்.
நடிக்க வந்ததிலிருந்து விஜய்யுடன் சிவகாசியில் ஒரேயொரு பாடலுக்கு மட்டும் நயன்தாரா குத்தாட்டம் போட்டிருக்கிறார். அதைத் தொடர்ந்து இருமுறை கதாநாயகி வாய்ப்பு வந்தும் அது கை கூடாமலே போய்விட்டது. இந்தக் குறையும் இப்போது நீங்கி விட்டது.
முதலில் ஏவி.எம். படத்தில்தான் விஜய்க்கு ஜோடியாக நயன் நடிப்பதாகக் கூறப்பட்டது. இப்போது அதில் ஒரு சிறு மாற்றம். ஐங்கரன் இன்டர்நேஷனல் தயாரிக்க, பிரபு தேவா இயக்கும் புதுப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார் நயன்தாரா.
இன்னொரு பெரிய விஷயம், கமலின் அடுத்த படத்துக்கு நயனிடம் பேசிக் கொண்டிருப்பதாக வெளியாகியிருக்கும் தகவல்!
கலக்குங்க சேச்சி!!


Click it and Unblock the Notifications











