'வித்தகன்'-பார்த்திபனை காப்பாற்றுமா?

இதிலிருந்து மீண்டு, தன் நிலை நிமிர பார்த்திபன் நடித்துக் கொண்டிருக்கும் படம் வித்தகன். இந்தப் படத்தின் இயக்குநரும் இவரே. பூர்ணா ஜோடியாக நடிக்கிறார்.
செவன்த் சேனல் மாணிக்கம் நாராயணன் தயாரிக்கும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை எட்டிவிட்டது. ஏற்கென விளம்பர வித்தகரான பார்த்திபன், இந்தப் படத்துக்கு இன்னும் புதிய விளம்பர உத்திகளை திட்டமிட்டுள்ளாராம்.
எம்எஸ் பிரபு ஒளிப்பதிவு செய்ய ஸ்ரீதர் எனும் புதுமுகம் இசையமைக்கிறார்.
வித்தகன் தனக்கு இன்னொரு புதிய பாதையாக அமையும் எனும் பார்த்திபன், அதற்கு முன் ஆவலுடன் எதிர்பார்க்கும் படம் ஆயிரத்தில் ஒருவன். கிட்டத்தட்ட ஹீரோ ரேஞ்சுக்கு அவரது ரோல்தான் பேசப்படுகிறது.
Comments


Click it and Unblock the Notifications