நடிகர் பிருத்விராஜூக்கு மே 1ம் தேதி திருமணம்!

நந்தனம் என்ற மலையாள படத்தில் அறிமுகமாகி இன்று மலையாளம் மற்றும் தமிழில் பிரபல நடிகராகத் திகழ்பவர் பிருத்விராஜ்.
இப்போது மலையாளத்தில் உருமி என்ற படத்தை சொந்தமாகத் தயாரித்து நடித்து வருகிறார்.
ராவணன் படம் வெளியானபோது, அதில் நடித்த பிருத்விராஜிடம் மும்பையில் உள்ள ஒரு தனியார் டிவி பேட்டி எடுத்தது. அப்போது அந்த டிவியின் நிருபராக சென்றவர்தான் பிரதிக்ஷா.
அப்போது இருவருக்கும் ஏற்பட்ட பழக்கம், பின்னர் காதலானது. இந்தக் காதலுக்கு பெற்றோரும் சம்மதித்துவிட்டனர். பிருத்விராஜ் - பிரதிக்ஷா நிச்சயதார்த்தம் மும்பையில் உள்ள பிரதிக்ஷா வீட்டில் நாளை நடக்கிறது.
வரும் மே 1ம் தேதி இருவருக்கும் திருமணம் நடக்கிறது. கொச்சியில் உள்ள நட்சத்திர ஹோட்டலின் பிரமாண்ட மண்டபத்தில் திருமணத்துக்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
Comments


Click it and Unblock the Notifications