போலீஸ்காரரின் பைக்கில் சூட்டிங்குக்கு வந்த ரஜினி

இதையொட்டி அங்கு பலத்த போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டது. படப்பிடிப்பில் கலந்து கொள்வதற்காக, ரஜினி தனது போயஸ் கார்டன் வீட்டிலிருந்து மாலை 4.30 மணிக்கு புறப்பட்டார்.
கோயம்பேடு 100 அடி ரோடு வழியாக மீஞ்சூருக்கு போய்க் கொண்டிருந்தபோது மணலி அருகே போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. பல கிலோ மீட்டர் தூரத்துக்கு பஸ், கார், வேன் மற்றும் கண்டெய்னர் லாரிகள் நின்றிருந்தன.
இதனால் போக்குவரத்து நெரிசலில் சிக்கியவர் இரவு 7 மணி வரை மீஞ்சூரை அடைய முடியவில்லை.
இதையடுத்து அங்கு வந்த போக்குவரத்து போலீஸ்காரரை அழைத்து தன்னை மீஞ்சூரில் இறக்கி விட முடியுமா என்று ரஜினி கேட்டுள்ளார்.
இதைத் தொடர்ந்து ரஜினியின் அடையாளம் தெரியாமல் இருக்க தனது மழை கோட்டையும், ஹெல்மெட்டையும் தந்தார் போலீஸ்காரர். அதை அணிந்து கொண்டு ரஜினி அந்த மோட்டார் சைக்கிளில் படப்பிடிப்பு தளத்தை அடைந்தார்.
ரஜினி பைக்கில் வந்திறங்கியதைப் பார்த்து இயக்குனர் ஷங்கர் உள்ளிட்ட படப்பிடிப்பு குழுவினர் ஆச்சரியத்தில் ஆழ்ந்தார்களாம்.


Click it and Unblock the Notifications











