காலில் ஆணி... சிம்புவுக்கு அறுவைச் சிகிச்சை!

By Sudha

Simbu
காலில் ஏற்பட்டுள்ள ஆணி வலி காரணமாக, அறுவைச் சிகிச்சை செய்துகொள்கிறார் சிம்பு. இதனால் அவரது அனைத்து படப்பிடிப்புகளும் தள்ளிப் போடப்பட்டுள்ளன.

விண்ணைத் தாண்டி வருவாயா படத்துக்குப் பிறகு நடிகர் சிம்பு வானம் படத்தில் நடித்து வருகிறார். அவருக்கு காலில் ஆணி ஏற்பட்டு பாதத்தில் வீக்கம் காணப்பட்டது. இதனால் நடக்க சிரமப்பட்டார். டாக்டர்கள் அறுவை சிகிச்சை செய்து கொள்ள அறிவுறுத்தினர்.

இதையடுத்து ஆணியை அறுவை சிகிச்சை மூலம் அகற்ற முடிவு செய்துள்ளார். ஓரிரு நாளில் இதற்கான ஆப ரேஷன் நடக்கிறது. அறுவை சிகிச்சைக்கு பின் இரண்டு வாரங்கள் ஓய்வு எடுக்கிறார்.

எனவே படப்பிடிப்பு ரத்து செய்யப்படுகிறது. வானம் படத்தை காதலர் தினத்தில் ரிலீஸ் செய்ய முயற்சிகள் நடந்தன. தற்போது படப் பிடிப்பு நிறுத்தப்படுவதால் ரிலீஸ் தேதி தள்ளி வைக்கப்படுகிறது.

இதுபற்றி சிம்பு கூறும்போது, "கடந்த சில மாதங்களாக காலில் கடும் வலி ஏற்பட்டது. எனவே அறுவைச் சிகிச்சை செய்து அந்த ஆணி்யை அகற்ற முடிவு செய்துள்ளேன்.

இந்த ஆண்டும் எனக்கு நல்ல விதமாக அமையும் என்ற நம்பிக்கை உள்ளது. வானம் படத்தை பெரிதும் நம்பியுள்ளேன்," என்றார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X