பாடகராகிறார் சூர்யா!

கமல்ஹாசனில் தொடங்கி இன்றைய சுள்ளான்கள் வரை அவரவர் தங்கள் குரல் வளத்தை ரசிகர்களிடம் சோதித்துப் பார்த்துவிட்டனர்.
ஹீரோக்கள் சொந்தக் குரலில் பாடுவதால் அப்படி ஒன்றும் ரசிகர்களுக்கு சுகமாக இருந்துவிடப் போவதில்லை. ஆனால் பல நேரங்களில் படத்தின் விளம்பரத்துக்கு இந்த சொந்தக் குரல் பாடல்களும் உதவுகின்றன. இதைக் கருத்தில் கொண்டு, இப்போது சூர்யாவும் தன் குரல் வளத்தைக் காட்ட களமிறங்கியுள்ளார்.
தனது 25வது படமான சிங்கம் படத்தில் தன் சொந்தக் குரலில் அவர் ஒரு பாடல் பாடவிருப்பதாகக் கூறப்படுகிறது (ஷூட்டிங் தொடங்கும் முன்பே பப்ளிசிட்டியா!)
ஹரி இயக்கும் இந்தப் படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக நடிப்பவர் அனுஷ்கா என்று கூறப்படுகிறது. ஆனாலும் இன்னும் ஹீரோயின் விஷயம் இறுதி செய்யப்படவில்லையாம்.
இது சூர்யாவுக்கு 25வது படம் என்பதால், அதை மறக்கமுடியாத அனுபவமாக்கும் வகையில் பல புதுமைகளை செய்யப் போகிறார்களாம் ஹரி அண்ட் கோ.
அதில் ஒன்றுதான் சூர்யாவை சொந்தக் குரலில் பாடவைப்பது. விரைவில் இதுகுறித்து அதிகாரப்பூர்வமாக அறிவிக்க உள்ளார்களாம்.
படத்தைத் தயாரிப்பது சூர்யாவின் உறவினர் ஞானவேல். பருத்திவீரன் படத்தில் அமீரின் வயிற்றெரிச்சலைக் கொட்டிக் கொண்டாரே... அவர்தான் இவர்!


Click it and Unblock the Notifications











