ஹீரோவும் நானே...வில்லனும் நானே!

இடையில் கலகலப்பு, சக்கலக்க பேபி ஆகிய படங்களில் தோன்றிய உதயா, பின்னர் ஒரு ஆண்டுக்கும் மேல் எந்தப் படத்திலும் நடிக்காமல் அமைதியாக இருந்தார். இவர் பிரபல தயாரிப்பாளர் ஏஎல் அழகப்பனின் மகனும், பொய் சொல்லப் போறோம் பட இயக்குநர் அண்ணனுமாவார்.
தம்பிக்கு ஒரு நல்ல வெற்றிப் படம் அமைந்தது போலவே, இவருக்கும் இப்போது நல்ல கதாபாத்திரங்களாக அமையத் துவங்கியுள்ளதாம்.
சஞ்சய் ராம் இயக்கத்தில் உருவாகிவரும் பூவா தலையா படத்தில் எதிர் நாயகனாக நடித்துள்ளார் உதயா.
இதுகுறித்து உதயா கூறுகையில்,
இந்தப் படத்தில் 12 ரீல்களில் வில்லனாகவும், 2 ரீல்களில் கதாநாயகனாகவும் வருகிறேன். இம்மாதம் இறுதியில் பூவா தலையா திரைக்கு வர இருக்கிறது. இந்தப் படத்தைத் தொடர்ந்து நானும் அருண் விஜய்யும் நாயகர்களாக நடித்துள்ள துணிச்சல் திரைப்படம் வரப்போகிறது.
இத்தனை நாட்கள் படங்கள் வரவில்லையே... என நிறையப் பேர் கேட்டுவிட்டார்கள். எத்தனையோ வாய்ப்புகள் வந்தன. ஆனால் துண்டுத் துண்டு வேடங்களிலோ அல்லது பிடிக்காத கதைகளிலோ நடித்து பெயரைக் கெடுத்துக் கொள்ள விரும்பவில்லை. அதனால்தான் நல்ல வாய்ப்புக்காகக் காத்திருந்தேன் என்றார் உதயா.
உதயாவுக்கு இந்த செப்டம்பர் மகா சந்தோஷமான மாதமாக அமைந்து இருக்கிறதாம். அவருக்கு சமீபத்தில்தான் ஆண் குழந்தை பிறந்தது. இவருடைய தம்பி விஜய் டைரக்டு செய்த பொய் சொல்லப் போறோம் படம், மாதம் திரைக்கு வந்து வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது.
அடுத்து, பூவா தலையா' திரைக்கு வர இருக்கிறது.
பெரிய தயாரிப்பாளர்களும், டைரக்டர்களும் பெரிய நடிகர்களை தேடியே ஓடாமல், மாதச் சம்பளத்தில் கூட நடிக்கத் தயாராக இருக்கும் (இது எப்டி இருக்கு!) என்னைப் போன்ற நடிகர்களையும் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்கிறார், உதயா!
சொல்றது நல்லாத்தான் இருக்கு... படம் ஓடின பிறகு சம்பளத்தை ஏத்தாம இருப்பீங்களா?


Click it and Unblock the Notifications











