சமீராவுக்கு விஷால் கற்றுக் கொடுத்த உடற்பயிற்சி!!

கோலிவுட்டில் இப்போதைய பரபரப்பான நடிகைகளில் ஒருவராக மாறியிருப்பவர் சமீரா ரெட்டி. நடுநிசி நாய்கள் படத்தில் நடித்த இவர், இப்போது பிரபு தேவா இயக்கும் புதிய படத்தில் விஷால் ஜோடியாக நடிக்கிறார்.
படத்தின் கதைப்படி விஷால் ஜிம் மாஸ்டராக நடிக்கிறார். அங்கு வரும் சமீரா ரெட்டிக்கு கட்டுடல் பயிற்சி அளிக்கும் காட்சி சமீபத்தில் சென்னை வளசரவாக்கம் பகுதியில் உள்ள உடற்பயிற்சி நிலையம் ஒன்றில் படமாக்கப்பட்டது.
இந்தப் படத்துக்காக ஒரு நாள் முழுக்க சமீரா ரெட்டி சைக்கிளிங் செய்வது போன்றும், எப்படி சைக்கிள் மிதிப்பது, உடலை கட்டுக்கோப்பாக வைத்துக் கொள்வது எப்படி? என நிஜயமாகவே சொல்லிக் கொடுத்தாராம் விஷால். அதன் பிறகு படமாக்கப்பட்ட போது, அசத்தலாக நடித்துக் கொடுத்தாராம் சமீரா.
முழுக்க முழுக்க ஆக்ஷன் - காதல் கதையான இந்தப் படத்தை விஷாலின் அண்ணன் விக்ரம் கிருஷ்ணாவும் அண்ணி ஸ்ரேயா ரெட்டியும் தயாரிக்கிறாகள்.


Click it and Unblock the Notifications











