மினிஷா லம்பாவுடன் கன்னடத்தில் அர்ஜூன்!

By Sudha

அர்ஜூன் சர்ஜா என்ற இயற்பெயரைக் கொண்ட ஆக்ஷன் கிங் அர்ஜூன், பத்து வருட இடைவெளிக்குப் பிறகு மீண்டும் கன்னடப் படத்தில் நடிக்கப் போகிறார்.

கன்னடத்தைச் சேர்ந்த அர்ஜூன் தமிழ்ப் படங்களில் பிரபல நாயகர்களில் ஒருவர். தமிழில் பிசியான பின்னர் கன்னடப் படங்களில் நடிக்க அவருக்கு நேரம் இல்லை. எப்போதாவது நடிப்பார். கடைசியாக பத்து வருடங்களுக்கு முன்பு ஸ்ரீ மஞ்சுநாதா என்ற படத்தில் நடித்திருந்தார்.

இப்போது பத்து வருட இடைவெளிக்குப் பிறகு கன்னடத்திற்குத் திரும்பியுள்ளார். இதில் அவருடன் தெலுங்கு நடிகரும், இயக்குநருமான சக்கரவர்த்தி முக்கிய பாத்திரத்தில் நடிக்கிறார். இது முக்கோணக் காதல் கதையாகும். சமீர் இயக்குகிறார்.

இப்படத்தில் பெரும் தொழிலதிபர் வேடத்தில் வருகிறார் அர்ஜூன். படத்தின் நாயகியாக மினிஷா லம்பா நடிக்கிறார். இவருக்கு இதுதான் முதல் கன்னடப் படம். மல்லிகா ஷெராவத்தின் செமத்தியான குத்துப் பாட்டும் படத்தில் இடம் பெறுகிறது.

அர்ஜூனுக்கு ஜோடியாக நடிப்பது குறித்து மினிஷா லம்பா கூறுகையில், இதுவரை என்னை கவர்ச்சிப் பாவையாக மட்டுமே பார்த்து வந்த ரசிகர்களுக்கு நான் சேலை கட்டி நடிக்கப் போவது வித்தியாசமாக இருக்கும். எனக்கே கூட வித்தியாசமாகத்தான் இருக்கிறது. இருந்தாலும் சேலையில்தான் இந்தியப் பெண்கள் நிறைய கவர்ச்சியாக உள்ளனர். எனவே சேலையில் வந்தாலும் இந்தப் படத்திலும் நான் கவர்ச்சிச் சோலையாகவே இருப்பேன் என்று நம்பலாம்.

உண்மையில் எனக்கு சேலை என்றால் உயிர். ஆனால் கட்டத்தான் யாரும் வாய்ப்பு தருவதில்லை. (எங்க ஊரிலும் நமீதா கூட இப்படித்தான் ரொம்ப வருத்தப்படறாங்க மேடம்)

நான் இதில் அர்ஜூனின் மனைவியாக வருகிறேன். நடிக்க இதில் எனக்கு நிறைய வாய்ப்பு. இதை விட சிறந்த படம் எனக்கு தென்னிந்திய மொழியில் கிடைத்திருக்காது. அர்ஜூன், சக்கரவர்த்தி ஆகியோர் நான் மதிக்கும் நடிகர்கள். அவர்களுடன் இணைந்து நடிப்பது பெருமையாக இருக்கிறது என்றார் மினிஷா.

மல்லிகா ஷெராவத் கன்னடப் படத்தில் குத்துப் பாட்டுக்கு ஆடவிருப்பது இது 2வது முறையாகும். ஏற்கனவே அவர் ஏக் பிரீத்தி ஏக்கே பூமி மெலிதே என்ற படத்தில் ஒரு ஐட்டம் பாட்டுக்கு ஆடியுள்ளார்.

இப்படத்தின் பெயரைச் சொல்லவில்லையே, கான்ட்ராக்ட் (Kontract) என்று வைத்துள்ளனர். ஆக்ஷன், ரொமான்ஸ், குடும்ப சென்டிமென்ட் என்று கலந்து கொடுக்கின்றனராம்.

படத்தை இயக்கும் சமீர், முன்பு சக்கரவர்த்தியிடம் உதவி இயக்குநராக இருந்தவர். கன்னட சூப்பர் ஸ்டார்களில் ஒருவரான உபேந்திராவின் புதிய படமான ஸ்ரீமதியில் உதவி இயக்குநராகப் பணியாற்றியுள்ளார்.

இப்படத்தை முதலில் தமிழ், தெலுங்கில் எடுக்கவே திட்டமிட்டிருந்தனர். பின்னர்தான் கன்னடத்திற்கு மாற்றி விட்டனர். கன்னடத்தில் படத்தை முடித்த பின்னர் தெலுங்கில் டப் செய்யவுள்ளனராம். தமிழில் ரீமேக் செய்வார்கள் என்று தெரிகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X