எங்கள் ஆசான்: தடை நீக்கம்!

விஜயகாந்த், ஷெரில் பிரிண்டோ நடித்துள்ள படம் 'எங்கள் ஆசான்'. இதை யுவஸ்ரீ கிரியேஷன்ஸ் சார்பில் தங்கராஜ் தயாரித்துள்ளார்.
படம் ரிலீசாக இருந்த நிலையில், மெட்டா ஆடியோ உரிமையாளர் காஜாமைதீன், தயாரிப்பாளர் தனக்கு தரவேண்டிய 13 லட்சம் ரூபாய் பணத்தை வட்டியுடன் தரும்வரை படத்தை வெளியிட தடை விதிக்க வேண்டும் என்று வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கில் நீதிமன்றம் இடைக்கால தடை விதித்தது.
இந்நிலையில் படத்திற்கான தடையை நீக்க வேண்டும் என்று தயாரிப்பாளர் தங்கராஜ் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனு நீதிபதி ஜெய்பால் முன்னிலையில் நேற்று விசாரணைக்கு வந்தது. படத்தை சென்னையில் வெளியிட்டு அதில் வரும் வசூலை கொண்டு 13 லட்சத்தை தருவதாக தயாரிப்பாளர் தரப்பில் ஒப்புக் கொள்ளப்பட்டது.
அதை காஜாமைதீனின் வழக்கறிஞர் கே.ஹரிசங்கர் கிருஷ்ணசாமியும் ஒப்புக் கொண்டார். பிறகு நீதிபதி ஜெய்பால், படத்தை திரையிட இருந்த தடைய நீக்குவதாகவும், படம் வெளியான இரண்டு வாரத்துக்குள் தயாரிப்பாளர் மனுதாரருக்கு சேர வேண்டிய 13 லட்சம் பணத்தை நீதிமன்றத்தில் டெபாசிட் செய்ய வேண்டும் என்றும் கூறினார்.
இதே தயாரிப்பாளர் மீது செவன்த் சேனல் மாணிக்கம் நாராயணன் தொடர்ந்துள்ள வழக்கு 28-ம் தேதி விசாரணைக்கு வருகிறது. அந்த வழக்கிலிருந்தும் தப்பித்தால் மட்டுமே எங்கள் ஆசானின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்படும்.


Click it and Unblock the Notifications











