கமலுடன் மீண்டும் லட்சுமி!

முன்பு நாகேஷ், எஸ்என் லட்சுமி போன்றவர்களை தன் படங்களில் முக்கிய பாத்திரங்களில் தோன்ற வைத்து பெரிய அளவு பேச வைத்தார்.
அந்த வரிசையில் இப்போது நடிகை லட்சுமியை தனது உன்னைப் போல் ஒருவன் படத்தில் நடிக்க வைத்துள்ளார் கமல்.
இந்திப் படமான எ வெட்னஸ்டே படத்தின் தழுவலான இதில் தலைமைச் செயலாளர் பாத்திரம் ஒன்று இடம்பெறுகிறது. அந்த வேடத்துக்கு லட்சுமி மிகப் பொருத்தமாக இருப்பார் என்பதால், அவரை நடிக்க வைத்துள்ளாராம்.
இந்தப் படத்தில் கமலுடன் மோகன்லாலும் முக்கிய கேரக்டரில் நடிக்கிறார். கமல் மகள் ஸ்ருதி இசையமைக்கிறார். சக்ரி டோலெட்டி இயக்குகிறார்.
ஹைதராபாத்தில் நடக்கும் இப்படப்பிடிப்பில் லட்சுமியும் கலந்து கொண்டு நடிக்கிறார்.
Comments


Click it and Unblock the Notifications