என் கணவர் மீது பொய் நில அபகரிப்பு புகார்: நடிகர் விக்னேஷ் மனைவி மனு

By Siva

vignesh
சென்னை: என் கணவர் மீது வீரம்மாள் வேண்டும் என்றே பொய் நில அபகரிப்பு புகார் கொடுத்துள்ளார் என்று நடிகர் விக்னேஷின் மனைவி உமா மகேஸ்வரி கமிஷனர் அலுவலகத்தில் மனு கொடுத்துள்ளார்.

கடந்த 22-ம் தேதி ஈக்காட்டுதாங்கலைச் சேர்ந்த வீரம்மாள் என்ற 80 வயது மூதாட்டி நடிகர் விக்னேஷ் மீது நில அபகரிப்பு புகார் கொடுத்தார். அந்த புகாருக்கு மறுப்பு தெரிவித்து விக்னேஷின் மனைவி உமா மகேஸ்வரி சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் மனு கொடுத்துள்ளார்.

அந்த மனுவில் அவர் கூறியிருப்பதாவது,

ஆலந்தூரில் திருவிக இன்ட்ஸ்ட்ரியல் எஸ்டேட் என்ற பெயரில், எனக்கு சொந்தமான இடம் உள்ளது. இந்த இடத்தை எனது அம்மா சுதா எனக்கு எழுதி வைத்தார்.

இந்நிலையில் வீரம்மாள் என்பவர் என் மீதும், எனது கணவர் விக்னேஷ் மீதும் நில அபகரிப்பு புகார் கொடுத்துள்ளார். இந்த இடம் வீரம்மாளின் மூத்த மகனான சின்னதம்பிக்கு சொந்தமானது. கடந்த 2001-ம் ஆண்டு அவர் இறந்துவிட்டார்.

பல்வேறு வங்கிகளில் சின்னதம்பி கடன் வாங்கியிருந்தார். இதனை அடைக்க முடியாமல் அவரது மனைவி கீதா கஷ்டப்பட்டார்.

இந்நிலையில் கீதாவின் அக்காள் என்ற முறையில் எனது தாய் சுதா அக்கடன்களை அடைத்தார். இதற்கு பிரதிபலனாக அந்த சொத்தை கீதாவும், அவரது மகன்களும் சேர்ந்து எனது தாயின் பெயருக்கு எழுதி வைத்தனர்.

இந்த சொத்தை எனது தாய் என் பெயருக்கு மாற்றிக் கொடுத்துள்ளார். இந்த சொத்து சம்பந்தமாக எனக்கும், வீரம்மாளுக்கும் இடையே வழக்கு நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் வீரம்மாளும், அவரது மகன்களான ராஜு, தங்கராஜ் ஆகியோர் சொத்து தொடர்பாக புகார் அளித்திருப்பது நீதிமன்ற அவமதிப்பாகும். எனது கணவர் மீது வேண்டுமென்றே பொய் புகார் கொடுக்கப்பட்டுள்ளது. எனவே, வீரம்மாள் மற்றும் அவரது மகன்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.

இவ்வாறு அவர் அதில் கூறியிருந்தார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X