பிபிசி நிருபர் சுப்ரியாவை ரகசியமாக மணந்தார் நடிகர் பிருத்விராஜ்
பிபிசியில் நிருபராக பணியாற்றி வரும் கேரளாவைச் சேர்ந்த சுப்ரியா மேனனுக்கும், மலையாள நடிகர் பிருத்விராஜுக்கும் இன்று படு ரகசிய்மாக திருமணம் நடந்து முடிந்து விட்டது.
பாலக்காட்டில் வைத்து இந்தக் கல்யாணத்தை சத்தம் காட்டாமல் முடித்துள்ளனர். அங்குள்ள ரிசார்ட்டில் கல்யாணம் நடந்ததாக தெரிகிறது. மிக மிக நெருக்கமான உறவினர்கள் மட்டுமே கல்யாணத்தில் கலந்து கொண்டார்களாம்.
திருமணத்தை ஏன் ரகசியமாக வைத்தனர் என்பது தெரியவில்லை. மே 1ம் தேதி எர்ணாகுளத்தில் உள்ள ஒரு ஸ்டார் ஹோட்டில் வரவேற்பை வைத்துள்ளனர். அதில் நடிகர், நடிகையர்கள் அழைக்கப்படவுள்ளனர்.
நடிகர் பிருத்விராஜ், பிரபல மலையாள நடிகரான மறைந்த சுகுமாறனின் மகன் ஆவார். அவர் மணந்துள்ள சுப்ரியா மேனனின் பெற்றோர் விஜயக்குமார் மேனன், பத்மஜா. இக்குடும்பம் டெல்லியில் செட்டிலாகியுள்ளது.


Click it and Unblock the Notifications












